Keelapavoor Kulam- கீழப்பாவூர் பெரியகுளம்
சிற்றாறு படுகையில் பாகூர் ஆனா கீழப்பாவூர் குளம் தென் மாவட்டங்களில் குறிபிடத்தக்க பெரிய குளங்களில் ஒன்றாகும். சிற்றாற்றின் கடப்போகத்தி அணையின் தென்பகுதி பிரிவில் இருந்து தனி கால்வாய் மூலம் கீழப்பாவூர் பெரியகுளத்திற்கு தண்ணீர் வருகிறது. இதன் பரப்பளவு 260 ஏக்கர் ஆழம் சராசரியாக 20 அடி. குளத்தின் முலம் 4,500 ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடைந்து வருகின்றன.
கீழப்பாவூர் குளம் நிரம்பி பின்னர் நாகல்குளம், தம்பத்துகுளம், கடம்பங்குளம் ஆலங்குளம் தொடர்ந்து மானூர் வரை சென்று வளமாக்குகிறது. மேலும் கீழப்பாவூரில் உள்ள நிலங்களுக்கு தனி சிறப்புண்டு. மேற்கிலிருந்து நிலம் படிப்படியாக சரிந்து இருப்பதால் வடிகால் அமைப்புடன் உள்ளத்தால் ஆண்டின் பாதி நாள் பணப்பயிர்(வெங்காயம், மிளகாய்,கிழங்குகள், காய்கறிகள் ) செய்வதற்கு வசதியாகவும், ஒரு போகம் நெல் விளைவதற்கு நிலம் மிக வசதியாகவும் உள்ளது..
பணபயிரான வெங்காயம், வத்தல் மற்றும் காய்கறிகள் உற்பத்தி செய்கிற இடங்களில் தமிழ்நாடில் குறிபிடத்தக்க இடம் கீழப்பாவூருக்கு உண்டு.
கீழப்பாவூர் பெரியகுளத்தின் மூலம் கீழப்பாவூர், குறும்பலாப்பேரி, ராஜபாண்டி, வெள்ளகால், மூலக்கரையூர், கோட்டையூர், கருமடையூர் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.
குளத்தில் உள்ள 7 மடைகள் உள்ளன.
super wesite
ReplyDelete