இயற்கை வேளாண்மை!
'இயற்கை வழி வேளாண்மை' பக்கம் விவசாயிகளைத் திருப்புவதால் மட்டுமே 'கடன் அரக்கன்' பிடியிலிருந்து வெகுவாகத் தப்ப வைக்க முடியும் என்பது கண்கூடு! ஆங்காங்கே தனிநபர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் வழிகாட்டுதலோடு, வெற்றிகரமாக 'இயற்கை வேளாண்மை'யில் சாதித்துக் கொண்டிருக்கும் விவசாயிகளே இதற்கு சாட்சி!
மாபெரும் இப்பணியை, கையில் எடுக்கும்போதுதானே... முழுப் பலனும் விவசாயிகளுக்குப் போய்ச்சேரும்! கூடவே, பொதுமக்கள் அனைவருக்குமே நஞ்சற்ற உணவுப் பொருட்களும் உறுதியாகுமே!
இதை உணர்ந்துதான் உலகின் குட்டி நாடுகளில் ஒன்றான பூடான், 'இது, இயற்கை விவசாய நாடு' என்று தன்னை அறிவித்துக் கொண்டு, இயற்கை வேளாண்மைக்கு மாறியிருக்கிறது. 'இந்தியாவின் முதல் இயற்கை விவசாய மாநிலம்' என்றபடி, நடைபோட ஆரம்பித்துவிட்டது சின்னஞ்சிறு மாநிலமான சிக்கிம்!
பூடான் போல... சிக்கிம் போல... கீழப்பாவூரை மாற்றுவோம் !!!!!
0 comments :