சி.ஏ. ஆகலாம் சிம்பிளாக!
சி.ஏ. படிப்பது தொடர்பாக நம்மவூரு ஆடிட்டர் தரும் ஆலோசனை:
சி.ஏ. படிப்பது பலரது கனவு. போராடிக் கிடைக்கும் வெற்றிக்கு தனி மதிப்பு உண்டுதானே. அப்படிதான் சி.ஏ.வும். அதைப் படிக்க விரும்புபவர்கள் தீவிர லட்சியத்துடன் திட்டமிட்டுப் படித்தால் வெற்றி நிச்சயம். கணிதவியல் படிக்கும் மாணவர்கள் மட்டுமின்றி, கணிதப் பாடப் பிரிவு படித்தவர்களும் சி.ஏ. படிக்கலாம். உலகம் முழுவதும் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் செல்கிறது. எனவே, சி.ஏ. படித்தவர்களுக்கு எப்போதுமே சிறப்பான எதிர்காலம் உண்டு.
''இன்றைய தேதியில் இந்தியா முழுக்க 7 லட்சம் மாணவர்கள் சி.ஏ. படிக்கிறார்கள். ஆனால், கடைசி பரீட்சையில் பாஸாகி ஆடிட்டராவது என்னவோ வெறும் 10 ஆயிரம் பேர்தான். சி.ஏ. பரீட்சையில் பாஸ் செய்வதை ஏறக்குறைய முடியாத செயலாகப் பலரும் நினைக்கிறார்கள். இது முழுக்கத் தவறு.
சாதாரண விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த நானே சி.ஏ. ஆகியிருக்கிறேன். மற்றவர்களால் முடியாதா என்ன?
சி.ஏ. படிப்பது என்று தீர்மானமாக முடிவு செய்துவிட்டால், அசாத்திய உழைப்பு தேவை. கம்பெனிச் சட்டங்கள், வரிவிதிப்பு விதிகள், கணக்கெழுதும் முறைகள் என ஒவ்வொரு விஷயத்தையும் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும். ஒரு நாளைக்குக் குறைந்தது ஐந்து மணி நேரமாவது படித்தால், மூன்றாண்டுகள் முடிவில் நீங்கள் சி.ஏ. ஆவது உறுதி.
இன்றைக்கு அத்தனை நிறுவனங்களும் தங்களின் பேலன்ஸ்ஷீட்டை ஒரு ஆடிட்டரிடம் கொடுத்துத் தணிக்கை செய்ய வேண்டும். ஆடிட்டர் தணிக்கை செய்த பேலன்ஸ்ஷீட்டுக்கு வங்கிகள் எளிதாகக் கடன் கொடுக்கின்றன. மக்களும் அந்த நிறுவனத்தின் மீது உடனடியாக நம்பிக்கை வைக்கத் தொடங்குகின்றனர். எனவே, இந்த வேலையில் கை நிறையச் சம்பளம் கிடைக்கும் என்பது நிதர்சனம். இன்றைக்கு சி.ஏ. படித்து முடித்தவர்களுக்கு ஆரம்பத்திலேயே 60 ஆயிரம் சம்பளம் கிடைக்கிறது.
10-ஆம் வகுப்பு படிக்கும் உங்கள் மகனையோ அல்லது மகளையோ இப்போதே நீங்கள் தயார் செய்ய ஆரம்பித்தால், எதிர்காலத்தில் எந்தப் பிரச்னையும் இல்லாமல் கை நிறையச் சம்பாதிக்கலாம்!''
சி.ஏ. படிக்க விருப்பம் இருக்கும் நம்மவூரு மாணவர்கள் என்னை தொடர்பு கொள்ளலாம்
சி.சந்திரசேகரன் B.Com., B.L., ACA
மூவேந்தர் வடக்கு தெரு
கீழப்பாவூர்
Mail: ca_sekar@yahoo.co.in
Offices : Chennai & Pavoorchatram
0 comments :