பொதிகை, நெல்லை ரெயில்களின் நேரம் மாற்றம்
தெற்கு ரெயில்வே அறிவித்தபடி பொதிகை, நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில்களின் நேர மாற்றம் பிப்.24–ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
பொதிகை, நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில்களின் நேரம் மாற்றியமைக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே கடந்த ஆண்டு டிசம்பர் 27–ந் தேதி அறிவித்திருந்தது.
அதன்படி வருகிற 24–ந் தேதி முதல் இந்த ரெயில்கள் சென்னையில் இருந்து புறப்படும், வந்து சேரும் நேர மாற்றம் அமலுக்கு வருகிறது.
சென்னை எழும்பூரில் இருந்து தினமும் இரவு 8.10 மணிக்கு புறப்படும், செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் இரவு 8.50 மணிக்கு புறப்படும்.
இந்த ரெயில் செங்கோட்டைக்கு காலை 8.20 மணிக்கு பதில் காலை 9 மணிக்கு போய்ச்சேரும்.
அதே போல் செங்கோட்டையில் இருந்து, தினமும் இரவு 7 மணிக்கு பதிலாக மாலை 6.30 மணிக்கு புறப்படும். அதனால் சென்னை எழும்பூருக்கு, காலை 7.05–க்கு பதிலாக காலை 6.40 மணிக்கு வந்து சேரும்.
சென்னை எழும்பூரில் இருந்து தினமும் 8.50 மணிக்கு புறப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ், இரவு 8.10 மணிக்கு புறப்படும். இந்த ரெயில் நெல்லைக்கு காலை 8.35 மணிக்கு பதிலாக காலை 8 மணிக்கு போய்ச்சேரும்.
அதே போல் திருநெல்வேலியில் இருந்து தினமும் மாலை 6.50 மணிக்கு புறப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் இரவு 7.25 மணிக்கு புறப்படும்.
0 comments :