.

All About Keelapavoor

Showing posts with label news. Show all posts

கீழப்பாவூர் குளக்கரையின் தன்மை குறித்தும் பிரபாகரன் எம்.பி அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார்.

கீழப்பாவூர்  மாதங்கோயில் , ஆசாரி வடக்குத்தெரு அருகே நீர்வரத்து உள்ள சிறு பாலங்கள் மற்றும் கீழப்பாவூர் குளங்ககளில் இருந்து நீர் வெளியேறும் மதகுகள் மற்றும் குளத்தின் கரைகளில் ஏதேனும் கசிவுகள் உள்ளதா என்றும் நீர்க் கசிவு ஏற்பட்டு மண்மூட்டைகளால் சரிசெய்யப் பட்டுள்ளதையும் பார்வையிட்டு குளக்கரையின் தன்மை குறித்தும் பிரபாகரன் எம்.பி அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார்.


குளத்தின் அரிப்பு ஏற்பட்டுள்ள பகுதி மற்றும் உடைந்த பாலங்களில் சரி செய்ய வேண்டியவற்றை உடனே சரி செய்வது உள்ளிட்ட பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.


 மேலும் அப்பகுதி மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.



நிகழ்ச்சியில் பொதுபணி துறை அதிகாரிகள், மாவட்ட கவுன்சிலர் சேர்மப்பாண்டி, கீழப்பாவூர் யூனியன் துணைச் சேர்மன் குணம், பெத்த நாடார்பட்டி பஞ்சாயத்து தலைவர் ராதா, பேரூராட்சி நிர்வாக அதிகாரி விஜயகுமார், சுரேஷ் லிகோரி, ஜெயராமன், கணபதி, சாமிநாதன் உள்பட பலர் சென்றனர்.

Learn more »

சிறந்த விஞ்ஞானி விருது கீழப்பாவூரைச் சேர்ந்த ஞானமிக்கேல்பிரகாசம்

கீழப்பாவூரைச் சேர்ந்த  லூர்துஅந்தோணி-செல்வபாக்கியம் தம்பதியினர்  இருவரும் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளனர். இவர்களுடைய மகன் ஞானமிக்கேல்பிரகாசம். இவர்  ஆர்.சி தொடக்கப்பள்ளியில் தனது பள்ளிபடிப்பை தமிழ்வழியிலும்,  பின்பு  பாவூர்சத்திரத்தில் உள்ள த.பி.சொ.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்வழியில் படித்துள்ளார். தனது பி.யூ.சி படிப்பை ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி கல்லூரியிலும், பி.இ படிப்பை மதுரை தியாகராஜர் எஞ்சீனியரிங் கல்லூரியிலும், எம்.டெக் படிப்பை சென்னையில் உள்ள ஐ.ஐ.டி-யிலும் எம்.பி.ஏ படிப்பை அண்ணாமலை பல்கலை கழகத்திலும் படித்து முடித்துள்ளார்.



 இவர் பெங்களூரில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனதத்தில் (D.R.D.O)  எலக்ட்ரானிக்ஸ் ராடார் மேம்பாட்டு ஆராய்ச்சி ((L.R.D.E) ) அமைப்பில் மூத்தவிஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார். 1987-ல் விஞ்ஞானி-"பி"(B)யாக பணியை துவக்கிய இவர் இப்போது விஞ்ஞானி"ஜி"(G) நிலைக்கு உயர்ந்து பணியாற்றி வருகிறார். இவருக்கு மத்திய அரசால் 2014-ம் ஆண்டிற்கான சிறந்த விஞ்ஞானி(Scientist of the Year-2014)  என்ற விருதினை மத்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர்பாரிக்கரிடம் இருந்து பெற்றுள்ளார் 

ஞானமிக்கேல்பிரகாசம் National Science Award- 2003. Agni Award for self Reliance- 2007   உள்ளிட்ட பல விருதுகள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கதாகும். ராடார்ஆராய்ச்சித்துறையில் 25க்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதியுள்ளார். அதேபோல் "SystemGenerator" என்ற நூலை உருவாக்கியவர்களில் இவரும் ஒருவர் ஆவார் என்பது குறிப்பிடதக்கதாகும். இவரது மனைவி செல்வி பெங்களூரில் ஸ்டேட்பாங்ஆப் இந்தியாவிலும், மகன் ரூபஸ்மிக்கேல் ஆப்பிள் நிறுவனத்திலும், மற்றொறு மகன் அனூஸ் இன்டெல் நிறுவனத்திலும் பணியாற்றி வருகிறன்றனர். தமிழ்வழியில் கல்வி கற்ற இந்த சாதனை தமிழனை பாரட்டுவோம்
Learn more »

சிசி டிவி கண்காணிப்பு கோபுரம் திறப்பு விழா டி.எஸ்.பி சங்கு திறந்து வைத்தார்

கீழப்பாவூர் சென்ட்ரல் பேங்க் அருகில் புதிய சிசி டிவி கண்காணிப்பு கோபுரத்தை  டி.எஸ்.பி சங்கு திறந்து வைத்தார் , நிகழ்சியில் பாவூர் சத்திரம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு ) செந்தாமரைக்கண்ணன் ,சப் இன்ஸ்பெக்டர் ஜெயகுமார் ,கீழப்பாவூர் பேரூராட்சி  மன்ற தலைவர் பொன் அறிவழகன் அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து மண்டல மாவட்ட தலைவர் இளஅரசு ,வட்டார நெல் அரிசி வியாபாரிகள் சங்க துணைச்செயலாளார் ஆறுமுக நயினார்.
  

            
   டி.எஸ்.பி. சங்கு கூறியாதவது கணகாணிப்புக் கோபுரங்கள் அமைப்பதன் மூலம் குற்றங்கள் குறைய வாய்ப்பு உள்ளது ஏதோ ஒரு இடத்தில் விபத்து ஏற்ப்படுத்தி விட்டு தப்பி செல்ல முயலும் நபர்கள் இது போன்ற கண்காணிப்பு வளையங்களுக்குள் வரும் போது அவர்கள் தப்ப முடியாது மேலும் சந்தேகப்படும் படியான நபர்களை இதன் மூலம் கண்காணித்து குற்றங்களை தடுக்க முடியம் இவ்வாறு அவர் கூ றினார்

News: PIRAMA NAYAGAM
Learn more »

கீழப்பாவூர் ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ணசுவாமி கோவிலில் பவித்ரஉத்சவ விழா

கீழப்பாவூர் ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ணசுவாமி கோவிலில் விழாவில் புண்யாகவாசனம் , பகவத் பிரார்த்தனை நாம சங்கீர்த்தனம் சயனசேவை ,மற்றும் பவித்திர ஹோமம் ,பெருமாள் , விஷ்வக்சேனர் ஆகிய சுவாமிகளுக்கு பவித்ரமாலை சமர்ப்பணம் என பவித்ரஉத்சவ விழா வெகு விமர்சையாக நடைபெற்றது


ஆடி ,ஆவணி ,புரட்டாசி (விஷ்ணு பஞ்ச தினம் )திருவோணம் ,துவாதேசி,அம்மாவாசை , உள்ளிட்ட நாட்களில் இந்த உற்சவம் நடைபெறும். 

இந்த உற்சவத்தின் கலந்துகொண்டவர்கள் இறைவனிடம் எந்த கோரிக்கையும் வைக்க வேண்டியதில்லை அந்த நேரத்தில் சந்நிதியில் இறைவனை தரிசித்தாலே நம் கோரிக்கைகள் நிறைவேறும் இறைவனுக்கு சாத்தப்பட்டபவித்திரமாலையால்இறைவனுக்கே மென்மேலும்  பொலிவையும் சக்தியையும் அவருக்கே தர வல்லது இறைவனுக்கு சமர்பிக்கப்பட்ட பவித்திரமாலை உற்சவத்தில் கலந்து கொண்ட பக்த்தர்களுக்கு  பிரசாதமாக வழங்கபட்டது பூஜைகானஏற்பாடுகளை அர்ச்சகர் ரவி பட்டாச்சாரி தலைமையில் பக்த்தர்கள் செய்திருந்தனர்

News: PIRAMA NAYAGAM
Learn more »

கீழப்பாவூர் பேரூராட்சி பகுதியில் பிளாஸ்டிக்பை ஒழிப்பு விப்புணர்வு பேரணி

          கீழப்பாவூர்  பேரூராட்சி சார்பில் பிளாஸ்டிக் பை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணிக்கு பேரூராட்சி  செயல் அலுவலர் விஜயகுமார் முன்னிலை வகித்தார் ,மன்ற தலைவர் பொன் அறிவழகன் தலைமையேற்று கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார்.


   பேரணியில் ஏ.வி.உயர்நிலைப்பள்ளி ,இந்து நாடார் உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பிளாஸ்டிக்மூலம் ஏற்ப்படும் தீமைகள் குறித்து விளக்கி கூறி,விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கினர் பொதுமக்களுக்கு  பேரூராட்சி  சார்பில் துணிப்பைகள் வழங்கப்பட்டன ,
         பேரணியில் ஏவி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முருகன் ,ஆசிரியர்கள் முருகேசன் ,ஹரிஹர சுப்பிரமணியன் ,சிவகுமார் ,தயுமானசாமி ,இந்து நாடார் பள்ளி ஆசிரியர்கள் களஞ்சியம் ,பயிற்சி ஆசிரியர்கள் தெய்வேந்திரன்,பால சுப்பிரமணியன் , சுடலைமணி ,பேரூராட்சி இளநிலை உதவியாளர் ஜவகர் ,தர்மராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

News: PIRAMA NAYAGAM
Learn more »

கீழப்பாவூர் பெரியகுளத்தில் இருந்து நாகல்குளத்திற்க்கு இணைப்பு பாலம்

கீழப்பாவூர், நாகல்குளம்மற்றும்  மேட்டுமடையூர்  உள்ளிட்ட கிராம பகுதிளில் உள்ள சுமார்  2000 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது மேலும் கீழப்பாவூர் பெரிய குளத்தில் மழைகாலங்களில் தண்ணீர் அதிகரிக்கும் போது இப்பகுதி விவசாயிகளும் நாகல்குளம் பகுதி விவசாயிகளும் கரையை கடக்க மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்  இதையடுத்து விவசாயிகள் இப்பகுதியில் இணைப்பு பாலம் அமைக்க வேண்டி நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.பி. பிரபாகரனிடம் கோரிக்கை வைத்தனர் இதையடுத்து இவர்களின் கோரிக்கையை  ஏற்று கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி. தலைமையில்  பெரியகுளத்தில் இருந்து  நாகல்குளத்திற்க்கு இணைப்பு பாலம் அமைப்பதற்க்கான ஆய்வினை  பொதுப்பணித்துறை சேர்ந்த செயற்ப் பொறியாளர் காளிராஜ் ,உதவி செயற்ப் பொறியாளர் மதன சுதாகரன் ,உதவிப் பொறியாளர் சுப்பிரமணியபாண்டியன் உள்ளிட்ட அதிகாரிகள் மேற்கொண்டனர்  இதுகுறித்து பிரபாகரன் எம்.பி கூறியதாவது 


கீழப்பாவூர்  பெரியகுளம் பகுதியில் விவசாயம் செய்து வரும் விவசாயிகள்  மழைகாலங்களில் கரையை கடந்த விவசாயப் பொருட்கள் கொண்டு செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர் இதையடுத்து கீழப்பாவூர் பெரிய குளத்தில் இருந்து சுமார் 100 மீட்டர்  நீள இணைப்பு பாலம் அமைப்பதற்க்கான ஆய்வு மற்றும் சாத்தியக்கூறுகள் மேற்கொள்ளப்பட்டன இந்த இணைப்பு பாலம் வருவதன் மூலம் அருகில் உள்ள கிராம மக்கள் இந்த பாலம் வழியாக விவாசய விளைபொருட்களை கொண்டு செல்ல இந்தப் பாலம் மிகவும் பயனுள்ளதாக அமையும் ,இந்த பாலத்திற்க்கான மதிப்பீடு தயாரிக்கப்பட்டு பின்பு அதற்க்கு தேவையான நிதி ஒதுக்குவது குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.

  கீழப்பாவூர் ,நாகல்குளம்மற்றும்,கீழப்பாவூர் பேரூராட்சி நிர்வாக அதிகாரி விஜயகுமார் , மற்றும் கிராம நிர்வாக அதிகாரி ராஜசேகர் ,தொடக்க கூட்டுறவு வேளாண்மை வங்கி தலைவர் கே.ஆர்.பால்துரை ,மாவட்ட கவுன்சிலர் சேர்மப்பாண்டி ,கண்ணன் பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
News By: Keelapavoor c Piramanayagam
Learn more »

எம்பி மேம்பாட்டு நிதியிலிருந்து கீழப்பாவூரில் வளர்ச்சி திட்டம்

           கீழப்பாவூர் பேரூராட்சி மற்றும் நாகல்குளம் ஊராட்சியில் புதிதாக சமுதாய நலக்கூடம், நியாய விலைக்கடை, புதிய நூலகத்திற்கு பூமி பூஜை போடப்பட்டது .



நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.பி. பிரபாகரன் எம்பி மேம்பாட்டு நிதியிலிருந்து கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் நாகல்குளத்தில் ரூ.20 லட்சம் செலவில் சமுதாய நலக்கூடமும், கீழப்பாவூர் பேரூராட்சியில் ரூ.8 லட்ச  ம்  மதிப்பீட்டில் நியாய விலைக்கடை , சிண்டெக்ஸ் டேங்க் அமைப்பதற்கு ரூ.2 லட்சமும், புதிதாக நூலகம் கட்டுவதற்கு ரூ.15 லட்சமும் நிதி ஒதுக்கப்பட் டது . இதற்கான அடிக்கல் நாட்டு  
விழாவிற்கு கலெக்டர் கருணாகரன் தலைமை வகித்தார். நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.பி. பிரபாகரன் பூமி பூஜையை துவக்கி  கல்வெட்டை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் திட்ட இயக்குனர் விஜயகுமார், பி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ,மாவட்ட மைய நூலக அலுவலர்  மந்திரம் தாசில்தார் சுகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் செல்லப்பாண்டியன், கூடுதல் ஆணையாளர் சிதம்பரம், கீழப்பாவூர் பேரூராட்சி நிர்வாக அதிகாரி விஜயகுமார், கிராம நிர்வாக அதிகாரிகள் அம்மையப்பன், கார்த்திக்ராஜா, ஒன்றிய கவுன்சிலர் ஞான அருள் பொன்னுத்தாய், , நாகல்குளம் ஊராட்சி மன்றத் தலைவர் கோமதி நாச்சியார், மாவட்ட கவுன்சிலர் சேர்மப்பாண்டி, உட்படபலர் கலந்துகொண்டனர்.

 மேலும் கலெக்டரிடம்  கீழப்பாவூர் பெரிய குளத்தில் ஆக்கிரமித்துள்ள அமலை செடிகளை அகற்ற வேண்டும் என்று கே.ஆர்.பி. பிரபாகரன் எம்பி கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து  கலெக்டர் கருணாகரன், திட்ட இயக்குனர் விஜயகுமார் உட்பட அரசு உயர் அதிகாரிகள் கீழப்பாவூர் பெரிய குளத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

News -  

PIRAMA NAYAGAM

Learn more »

கீழப்பாவூரில் எம்.பி. பிரபாகரன் போலியோ சொட்டு மருந்து கொடுத்து தொடங்கி வைத்தார்.

நெல்லை மாவட்டத்தில் முதற்கட்டமாக 5 வயதுக்குட்பட்ட  குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்பட்டது.



 கீழப்பாவூர் மைதானம் அருகில் அமைக்கப்பட்டிருந்த மையத்தில் நெல்லை தொகுதி எம்.பி. கே.ஆர்.பி.பிரபாகரன் கலந்து கொண்டு போலியோ தடுப்பு சொட்டு மருந்தை குழந்தைக்கு கொடுத்து தொடங்கி வைத்தார்.

          இந்த நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் சுகாதார பணிகள் துணை இயக்குநர் ராம்கணேஷ், மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் பாலாஜி, பாவூர்சத்திரம் அரசு டாக்டர்  ராதாகிருஷ்ணன்,  வட்டார சுகாரார மேற்பார்வையாளர் இசக்கியப்பா மற்றும் மாவட்டகவுன்சிலர் சேர்மப்பாண்டி, நகர செயலாளர் பாஸ்கர் , பாவூர்சத்திரம்  அரிமாபட்டய  தலைவர்    சந்தாணம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


News & Photo:
Thanks: PIRAMA NAYAGAM
Learn more »

சென்னை வாழ் கீழப்பாவூர் நாடார் உறவின் சங்கத்தின் முதலாம் ஆண்டு விழா

சென்னை வாழ் கீழப்பாவூர் நாடார் உறவின் சங்கத்தின் முதலாம் ஆண்டு விழா 4-1-2015
 அன்று சென்னை மேற்கு மாம்பலத்தில்  நடைபெற்றது...

குத்துவிளக்கு ஏற்றி தொடக்கிவைத்தார் திருமதி. தமிழரசி சுடலைகனி











                                                    உறுப்பினர்களின் அறிமுகம்


                                                     உறுப்பினர்களின் அறிமுகம்









                                                    உறுப்பினர்களின் அறிமுகம்


                                                     உறுப்பினர்களின் அறிமுகம்

                                                     உறுப்பினர்களின் அறிமுகம்

                                                       உறுப்பினர்களின் அறிமுகம்



                                                                  குழந்தையின் நடனம்


                                               பெண்களுகான விளையாட்டு போட்டி..


                                            ஆண்களுக்கான விளையாட்டு


                                           சிறுவர்களுக்கான விளையாட்டு








                                             சிறுவர்களுக்கான ஓவிய போட்டி


                                          பெண்களுகான விளையாட்டு போட்டி..





                                                                         பரிசளிப்பு


                                                                            பரிசளிப்பு






Learn more »

கீழப்பாவூரில் உலக நன்மைக்காக 1008 தீபம் ஏற்றிய பக்த்தர்கள்

உலக நன்மைக்காக 1008  தீபம் ஏற்றிய பக்த்தர்கள் 


 கீழப்பாவூரில் உள்ள நரசிம்ம பெருமாள்  கோவிலில் நேற்று (1-1-2015)அதிகாலை 5.45மணிக்கு ராமநாம பஜனை, 10.30மணிக்கு உற்சவருக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம், அர்ச்சனை, தீபாராதனை நடைபெற்றது.


  மாலை 4மணிக்கு பரமபதவாசல் திறப்பும் சுவாமி சப்பரத்தில் எழுந்தருளி ஆலயத்தை  மூன்று முறை வலம் வருதலும், மாலை 5.45மணிக்கு கோவில் வெளிப்பிரகாரத்தில் ஆலயத்தை  சுற்றி உலக நன்மைக்காக  பக்த்ர்களால் 1008 அகல் விளக்கு தீபம் ஏற்றுதல் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

News - PIRAMA NAYAGAM
Learn more »

கீழப்பாவூர் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு

கீழப்பாவூர் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு  



கீழப்பாவூர் ருக்மணிசத்யபாமா  சமேதஸ்ரீ வேணுகோபால  கோவிலில்  வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று அதிகாலை 5மணிக்கு கோ பூஜை தொடர்ந்து ஸயன சேவை, 12மணிக்கு தீபாராதனை மாலை 6மணிக்கு பரமபதவாசல் திறப்பும், பஜனை, பெண்கள் கோலாட்டத்துடன் சுவாமி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து வருகிற 11ஆம் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது



News- PIRAMA NAYAGAM

Learn more »

கீழப்பாவூரில் தமிழக அரசின் விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் நிகழ்ச்சி


   கீழப்பாவூரில் தமிழக அரசின் விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் நிகழ்ச்சியை  பிரபாகரன் எம்.பி. தொடங்கி வைத்தார்.


  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு தமிழக அரசு விலையில்லா வேட்டி, சேலையை வழங்கி வருகிறது. அதன்படி கீழப்பாவூரில் மொத்தம் 5100 நபர்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கபட உள்ளது. இதன் துவக்கமாக  பிரபாகரன் எம்.பி தலைமை தாங்கி இலவச வேட்டி சேலைகளை வழங்கி தொடங்கி வைத்தார். 
 
                   இதில் ஆலங்குளம் தாசில்தார் சுகுமார், வருவாய் ஆய்வாளர் மாரிசெல்வம்,, மாவட்ட கவுண்சிலர் சேர்மப்பாண்டி,  யூனியன் துணைத்தலைவர் உத்திரகுணபாண்டியன்,மாநில பேச்சாளர் அப்பாத்துரை, கீழப்பாவூர் நகரசெயலாளர் பாஸ்கர், ஒன்றியகவுன்சிலர்கள் தியாகராஜன், ஆண்டபெருமாள், கிராமநிர்வாக அதிகாரி கார்த்திக்ராஜா ,பிச்சையா  உட்பட  பலர் கலந்து கொண்டனர்

News - PIRAMA NAYAGAM
Learn more »

குப்பை தொட்டியாக மாறி வரும் கீழப்பாவூர் பெரியகுளம்

     நெல்லை மாவட்டத்தில் விவசாயத்தின் முக்கிய பங்கு வகிப்பது கீழப்பாவூர் பகுதியாகும். கீழப்பாவூர் குளத்தின் மூலமும், கிணறு மூலமும் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது பெய்து வரும் மழையால் சிற்றாறு பாசனத்தின் கீழ் உள்ள கீழப்பாவூர் பெரியகுளம் நிரம்பி மறுகால் பாய்ந்துள்ளது. கடந்த காலங்களில் கீழப்பாவூர் பெரியகுளம் முழுவதும் நிரம்பினால் பாசனத்திற்கு 110 நாட்கள் வரை பயன்பட்டு வந்தது. தற்போது 70 நாட்கள் வரை தண்ணீர் உள்ளது. இதனால் மீதமுள்ள நாட்களில் வயல்களுக்கு தண்ணீரின்றி விவசாயிகள் கஷ்டபடுகின்றனர்.

Photo : Dinesh Kanna

இதற்கு காரணம் என்னவென்றால் தற்போது மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து நீர் பாதைகள் தனியார் ஆக்கிரமிப்பாலும், அமலை செடியாலும் ஆக்கிரமித்து உள்ளன. மேலும் கீழப்பாவூர் குளங்களை சுற்றி தனியார் பலர் ஆக்கிரமிப்பு செய்து சொந்த இடங்களாகவே பயன்படுத்தி வருகின்றனர். இனி வரும் காலங்களில் தனியாரால் கீழப்பாவூர் பெரியகுளம் பெரும் பகுதி இல்லாமல் போய் விடுமோ என்று விவசாயிகள் அச்சப்படுகின்றனர்.
மேலும் இப்பகுதி உள்ள குளங்களை பொதுப்பணித்துறையினர் முழு அக்கறை எடுத்து பராமரிப்பது கிடையாது.

             கீழப்பாவூர் குளத்தை நம்பி பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பயன் பெற்று வருகிறது. ஆனால் கீழப்பாவூர் குளங்கள் போதிய பராமரிப்பின்றி காணப்படுகிறது. கரைகள், படித்துறைகள் பல வருடங்களாக சிதிலமடைந்து காணப்படுகிறது. இக்குளங்களை தூர்வாரி பல வருடங்களாகிறது.  ஆனால் அதை இது வரை பொதுப்பணித்துறையினர் சரிசெய்யவில்லை. பொதுப்பணித்துறையினர் முழு அக்கறை எடுத்து தனியார் ஆக்கிரமிப்புகளை அகற்றியும், அமலை செடிகளை முழுவதுமாக அகற்றவும், குளங்களை தூர்வாரவும் செய்தால் இனி வரும் காலங்களில் இக்குளத்தில் கூடுதலாக நீர் நிரம்பி விவசாயம் செழிக்கும் என்று இப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

குப்பை தொட்டியாக மாறி வரும் பெரியகுளம்
கீழப்பாவூர் பெரியகுளத்தில் சுற்றியிருக்கும் பொதுமக்கள் தங்கள் வீட்டில் உள்ள கழிவுகளையும் பீடி இலை உள்ளிட்டவைகளை கொட்டி வருகின்றனர். இதனால் நீர் நிலை மாசுபடுவதோடு நாளடைவில் துர்நாற்றம் வீசி கொசுக்கள் உற்பத்தியாக நோய் பரவும் அபாய நிலை உள்ளது. எனவே பொதுமக்கள் வீட்டு கழிவுகளை குளத்தில் கொட்டுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாகும்.

- தினகரன் செய்தி 
Learn more »

முகப்புத்தக நண்பர்களின் கேள்விகளுக்கான பேரூராட்சி தலைவரின் பதில்கள்

முகப்புத்தக நண்பர்களுக்கான கேள்விகளுக்கு நமது பேரூராட்சி மன்றத்தின் தலைவர் பொன்.அறிவழகன் அவர்கள் பதிலளித்துள்ளார்.
நண்பர்களின் கேள்விகளோடு பதில்கள் இணைக்கப்பட்டுள்ளன, மேலும் நண்பர்களின் ஆலோசனைகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.



நண்பர் R.அன்புசிவில்: 
கீழப்பாவூர் முழுவதும் தாமிரபரணி தண்ணீர் கிடைக்க வழிசெய்தால் நன்றாக இருக்கும்.

பதில்: 
கீழப்பாவூர் முழுவதும் தாமிரபரணி தண்ணீர் கிடைக்க ஏற்பாடு நடந்து கொண்டிருக்கிறது. தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் புதிதாக அரசால் போடப்பட்டுள்ளது. நம் பேரூராட்சியின் பங்காக சுமார் 132 லட்சம் கட்ட வேண்டும். தற்போது கடந்த 
1 ஆண்டுக்குள் 41 லட்சம் கட்டியுள்ளோம். திட்டம் நடைமுறையில் உள்ளது.

நண்பர் சைலபதி ராமநாதன்: 
முத்தாரம்மன் கோவில் தெருவில் எப்போது ரோடு போடுவீங்க?

நண்பர் குரு பிரனவ்
முத்தாரம்மன் கோவில் வடக்கு மற்றும் தெற்கு தெரு மட்டும் தான் இன்னும் சரி பன்னாம இருக்கு. அதனால, அத சரி பன்றதுக்கு கொஞ்சம் நடவடிக்கை எடுங்க.

நண்பர் முத்துக்குமரன்:
நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பேங்க் ஸ்டாப் அருகே மறியல் செய்யப்படும்.

பதில்: 
முத்தாரம்மன் கோவில் வடக்குத் தெரு, சாமி கோயில் தெரு சிமெண்ட் சாலை போடுவதற்கு நிர்வாக அனுமதி (AS) பெறப்பட்டுள்ளது. விரைவில் சிமெண்ட் சாலை அமையும்.

நண்பர் முருகன்: 
வீட்டிற்கு ஒரு மரம் வேண்டாம்ஆனால்ஒரு தெருவிற்கு குறைந்தது ஒரு மரமாவது நட்டு பராமரிக்க இயலுமாநமது ஊரை பசுமை நிறந்த ஊராக மாற்ற முடியுமாஇதைச் செய்வதற்கு திட்டம் ஏது உள்ளதா?

பதில்: 
மரம் வளர்க்க யாரிடமும் கேட்க வேண்டாம். ஆர்வம் போதும்.


கீழப்பாவூர் இணையம்: 
அம்மன் கோவில் பக்கம் உள்ள வாறுகால்களுக்கு மூடி அமைத்தல்.


பதில்: 
மைதானத்தில் உள்ள வாறுகால் மூடி அமைக்க ஆவண செய்யப்படும்.

நண்பர் செல்வன்: 
நமது பேரூரட்சி அலுவலகத்தில் இருந்து பொதுமக்களுக்கு வீடு,கழிப்பறை கட்ட அரசு மானியம் ஏதும் உண்டாவிவசாயத்திற்கு எந்தெந்த பயிர்கள் பயிரிட்டால் மானியம் உண்டுஅப்படி மானியம் ஏதும் இருந்தால் மக்களுக்கு எப்படி விழிப்புணர்வு செய்துள்ளீர்கள்எவ்வளவு மக்கள் அந்த மானியத்தை பயன்படுத்துகிறார்கள்.?

பதில்: 
பேரூராட்சி பகுதிகளில் இலவச வீடு, கழிப்பறை கட்ட மானியம் இதுவரை இல்லை. கடந்த 2006 – 2011ம் ஆண்டுகளில் கழிவறை அமைக்க ரூ.1000 மட்டும் மானியமாக வழங்கப்பட்டது. சுமார் 100 பேர் பயன்பெற்றார்கள்.

நண்பர் ராஜ் ராஜன்: 
சென்ட்ரல் பேங்க் பகுதியில் பொது கழிப்பிடம், நிழற்குடை அமைக்கப்படுமா?

பதில்: 
சென்ட்ரல் பேங்க் அருகில் பொதுக் கழிப்பிடம் கட்ட, வட்ட கிணற்றுக்கு மேல் பக்கம் சிறிது இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் அமையும்.

நண்பர் ஞானசேகரன்: 
ஊரணிக்கு தண்ணிர் வரும் அனைத்து வழிகளும்அடைக்கப்பட்டுவிட்டது. 
இனி ஊரணிக்கு தண்ணிர் எப்படி வரும்இதற்கு அடுத்தமுயற்சி என்ன?

பதில்: 
ஊரணிக்கு தண்ணீர் பாதையை சென்ற வருடம் JCB மூலம் ஓரளவுக்கு வழி தடம் செய்யப்பட்ட்து. மக்கள் மீண்டும் மீண்டும் ஆக்கிரமிக்கிறார்கள். தற்போது இன்னும் கூடுதலாக சுகாதார கழிப்பிடம் 2 எண்ணம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அச்சமையம் நடைபயிற்சிக்கான நடைபாதையும் முழு வெற்றி பெறும். மரங்கள் சுமார் 10-க்கு மேல் வைத்து வளர்க்கப்பட்டு வருகிறது. சுற்றி போடப்பட்டுள்ள டியூப்லைட்டுகள் அனைத்தையும் உடைத்திருக்கிறாகள்.

நண்பர் ரமேஷ்கருப்பசாமி:
அரிசி ஆலைகளில் இருந்து வெளிவரும் சாம்பல்களை முழவதுமாக தடுக்க முடியுமா?

பதில்: 
அரிசி ஆலைகளில் இருந்து வரும் சாம்பல்களை கட்டுப்படுத்துங்கள் என்று பல முறை நோட்டீஸ் மூலம் தெரியப்படுத்தப்பட்டிருக்கிறது. சுகாதாரத் துறைக்கும் தெரியப்படுத்தப்பட்டிருக்கிறது.

நண்பர் சேர்மக்கனி சிவலிங்கம்
நம்ம ஊர்ல மின்சார சுடுகாடு எப்போ கொண்டுவருவிங்க?

பதில்: 
மின்சார தகன மேடை அமைய தற்போது சாத்தியமில்லை.



ஆலோசனைகள்:


நண்பர் செல்வராஜ் செல்வா: 
அம்மன் கோவில் கிணறு, சாமி கோவில் கிணறு, தூர் வாரலாமே.. தண்ணீர் துர்நாற்றம் வீசுகிறது.


நண்பர் கதிரேசபாண்டியன்: 
குளத்தின் அருகில் இருக்கும் வட்ட கிணறில் மீண்டும் குடிநீர் கிணறாக மாற்ற ஆவண செய்ய முடியுமா?


நண்பர் தனசேகர் ராமசாமி: 
கீழப்பாவூரில் இருந்து அடைக்கலப்பட்டணத்திற்கு மாறிய வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை மீண்டும் கீழப்பாவூரில் திறக்க முடியுமா?

வீடுகளில் குடிதண்ணீரை மோட்டார் மூலம் உறிஞ்சப்படுவதை தடுக்கும் முறையான வீட்டு இணைப்புகளில் உள்ள பைப்புகளில் குண்டு அமைத்தல் தற்போது பயன் இல்லாத நிலையில் உள்ளது.


நண்பர் ஞானசேகரன்: 
குளத்தில் கலக்கும் கழிவுநீரை(சாக்கடைவேறு வழியில் மாற்றிவிட முடியுமா?

அம்மன் கோவில் மைதானம்  வழியாக பஸ் வசதி எப்போதுஏற்படுத்துவீர்.?


நண்பர் தமிழ் அரசன்:
காய்கறி சந்தை இல்லாத நம்மூர் கண் இல்லாத முகம் போல்காட்சியளிக்கிறது. 
இருந்த ஒரு அடையாளத்தயைும் அனுப்பிவிட்டோமே.


நண்பர் தினேஷ் கண்ணா: 
பி.ரா.சி. மண்டபம் அருகில் விழும் தாமிரபரணி தண்ணீர் இரவு நேரங்களிலும் மற்ற நேரங்களிலும் வீணாகிறது. அதை கொஞ்சம் உயரமாக நல்லி மாதிரி வைக்க முடியுமா?


நண்பர் தங்கராஜா.T: 
அறியாமையை போக்க அனைவரும் அறிந்து கொள்ளும்படியாக,
கீழப்பாவூர் பேருராட்சிக்கு மக்களுக்கு உரிய திட்டங்களையும், செயல்பாடுகளையும்,
சலுகைகளையும், சான்றிதல்களையும் பெறும் வழிமுறைகளையும்,
விதிமுறைகளையும், கட்டணங்களையும் பொது இடங்களில் விளம்பரபடுத்தும்படி 
கேட்டு கொள்கிறோம்.


நண்பர் சதீஷ் ஸ்ரீரங்கன்: 
கீழப்பாவூர் ஊருணியை சுற்றி அழகான பூக்கள் மற்றும் மரம் வச்சு அந்த இடத்த சுத்தமாக வைத்தால் காலையில் நடைபயிற்சிக்கு நல்லதாக அமையும்.


நண்பர் ராஜா: 
நமது ஊரில் உள்ள அனைத்து தெருக்களுக்கும் பெயர் பலகை வைக்கம்.


நண்பர் மணிகண்டன்: 
வார்டு உறுப்பினர்கள் அந்தந்த வர்டு மக்களின் குறையை நிவர்த்தி செய்ய வாரம் ஒருமுறை அல்லது பத்து நாளுக்கு ஒருமுறை அந்தந்த வார்டுகளிலேயே முகாம் நடத்தலாமே.. மற்றும் அந்தந்த வார்டு உறுப்பினர்களின் பணி என்ன?


நண்பர் மாடசாமி: 
கீரைத்தோட்டத்தெருவில் வீட்டு தண்ணீர் இணைப்புகள் அனைத்தும் வீட்டிற்கு வெளியே அதுவும் ரோட்டில் இருந்து அடி ஆழத்தில் உள்ள பைப்புகளில் இருந்துதான் குடிதண்ணீர் பிடிக்கப்படுகிறது. ஏன் இந்த அவல நிலை?மற்ற தெருக்களில் எல்லாம் குடிதண்ணீர் இணைப்புகள் வீட்டின் உள்ளயே இருக்கின்றது அதுவும் ரோடில் இருந்து அடி உயரத்தில் இருக்கும் போது அங்கே விழும் தண்ணீரை விட கீரைத்தோட்டத்தெருவில் இருக்கும் அனைத்து வீடுகளிலும் ரோட்டில் இருக்கும் பைப்புகளில் விழவில்லைமற்றும் மற்ற தெருக்களில் மிதமிஞ்சிய அளவுக்கு தண்ணீர் விழுகிறது அதே சமயத்தில் அந்த அளவுக்கு தண்ணீரும் வீணாக வெளியேறுகிறது. இந்த நிலையை மாற்ற முடியுமா?


நண்பர் சுரேஷ்: 
கீரைத்தோட்டத்தெருவின் கிழக்கு ஓரத்தில்குளத்துப்பக்கத்தில் ஒத்தபனைமர அடியில் பனையடிசாமியும்பேச்சியம்மாள்சாமியும் இருந்து அருள் தருகின்றனர். கடந்த செப்டம்பர்.16-ந்தேதி இங்கு திருவிழா நடந்தது. அப்போது,சாமிக்கு அனைத்துவிதமான பூஜைகளும் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இருப்பினும் இங்கு எல்லோரும் அமர்ந்து சாப்பிட இயலவில்லை.ஏனென்றால்இங்கு சுற்றிலும் ஊரிலுள்ள கழிவுகள் அனைத்தும் இப்பகுதியில் வந்துதான் கலக்கின்றனஇதனால் துர்நாற்றம் அதிகம் வீசுகிறது. மேலும்குளத்தில் தண்ணீர் நிரம்பியபின் இந்த பகுதியில் இருந்த கழிவுநீர் இந்த கோவிலை சுற்றிலும் சுமார் அரை கிலோமீட்டர் தூரத்திற்கு படர்கிறது. இந்த காரணத்தால் பல வருடங்களாக இக்கோவிலுக்கு மக்கள் யாரும் வரவில்லை. இதனால்இங்கு கலக்கும் கழிவுநீரை இப்பகுதியில் கலக்காதவாறு செய்ய வேண்டும்அல்லது குளத்தின் கரையில் இருந்து சுமார் 200 மீட்டர் தூரத்திற்கு வாறுகால் அமைத்து கழிவுநீரை தூரத்தில் கொண்டு செல்லலாமே?
இப்பகுதியில் ஒரு அடிகுழாய் உள்ளதுஒரு காலத்தில் இந்த அடிகுழாய் மக்கள் பயன்பாட்டுக்கு நல்ல தண்ணீரக இருந்து வந்துள்ளதுநாளடைவில் இப்பகுதியில் கழிவுநீர் அதிகமாக அதிகமாக இந்த அடிகுழாய் தண்ணீர் மக்கள் பயன்படுத்த முடியாதபடி மாசடைந்துஅந்த அடிகுழாயே சீர்குலைந்துள்ளதுமேலும், இக்கழிவு நீரால் அப்பகுதியில் ஒரு காலத்தில் குடிநீராக மக்கள் பயன்பாட்டில் இருந்த வட்டகிணறுசாஸ்தா கோவில் கிணறு ஆகியவற்றின் தண்ணீரும் தற்போது மாசடைந்துள்ளதுஇந்த அவல நிலையை கூடிய சீக்கிரம் தீர்க்க முடியுமாமக்கள் பயன்பாட்டுக்கு இந்த கிணறுகள் மற்றும் கோவிலை கொண்டு வர முடியுமா?


நண்பர் ஜெயராஜ்: 
நமது ஊரின் நடுவில் இருக்கும் ஊர் தோப்பில் அதிகமான புளியமரங்களும் உள்ளது. அதே சமயத்தில் அங்கு ஏராளமான குப்பைக் கூளங்களும் உள்ளன. அப்பகுதியை சுற்றி ஏராளமான வீடுகள் உள்ளது. இந்த 10 ஆண்டுகளில் அப்பகுதியை கொஞ்சம் கொஞ்சமாக சுத்தப்படுத்தி வருவதை பாராட்டுகிறோம். இருப்பினும், குப்பைகள் நிறைந்த அந்த பகுதியில் மழை காலத்தில் அதிகமாக துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசு உற்பத்தியும் அதிகமாகிறது. இதனால் அப்பகுதியை சுற்றிலும் நோய் பரவ வாய்ப்புள்ளது. ஆகையால், அப்பகுதிக்கு கூடுதல் கவனம் செலுத்தி விரைவாக அதை தூய்மைப்படுத்தி அங்கு நடைப்பயிற்சி பாதை, சிறுவர்கள் விளையாடி மகிழ பூங்கா அமைத்து தந்தால் நல்லதாக இருக்கும்.
Learn more »