குப்பை தொட்டியாக மாறி வரும் கீழப்பாவூர் பெரியகுளம்
நெல்லை மாவட்டத்தில் விவசாயத்தின் முக்கிய பங்கு வகிப்பது கீழப்பாவூர் பகுதியாகும். கீழப்பாவூர் குளத்தின் மூலமும், கிணறு மூலமும் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது பெய்து வரும் மழையால் சிற்றாறு பாசனத்தின் கீழ் உள்ள கீழப்பாவூர் பெரியகுளம் நிரம்பி மறுகால் பாய்ந்துள்ளது. கடந்த காலங்களில் கீழப்பாவூர் பெரியகுளம் முழுவதும் நிரம்பினால் பாசனத்திற்கு 110 நாட்கள் வரை பயன்பட்டு வந்தது. தற்போது 70 நாட்கள் வரை தண்ணீர் உள்ளது. இதனால் மீதமுள்ள நாட்களில் வயல்களுக்கு தண்ணீரின்றி விவசாயிகள் கஷ்டபடுகின்றனர்.
இதற்கு காரணம் என்னவென்றால் தற்போது மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து நீர் பாதைகள் தனியார் ஆக்கிரமிப்பாலும், அமலை செடியாலும் ஆக்கிரமித்து உள்ளன. மேலும் கீழப்பாவூர் குளங்களை சுற்றி தனியார் பலர் ஆக்கிரமிப்பு செய்து சொந்த இடங்களாகவே பயன்படுத்தி வருகின்றனர். இனி வரும் காலங்களில் தனியாரால் கீழப்பாவூர் பெரியகுளம் பெரும் பகுதி இல்லாமல் போய் விடுமோ என்று விவசாயிகள் அச்சப்படுகின்றனர்.
மேலும் இப்பகுதி உள்ள குளங்களை பொதுப்பணித்துறையினர் முழு அக்கறை எடுத்து பராமரிப்பது கிடையாது.
கீழப்பாவூர் குளத்தை நம்பி பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பயன் பெற்று வருகிறது. ஆனால் கீழப்பாவூர் குளங்கள் போதிய பராமரிப்பின்றி காணப்படுகிறது. கரைகள், படித்துறைகள் பல வருடங்களாக சிதிலமடைந்து காணப்படுகிறது. இக்குளங்களை தூர்வாரி பல வருடங்களாகிறது. ஆனால் அதை இது வரை பொதுப்பணித்துறையினர் சரிசெய்யவில்லை. பொதுப்பணித்துறையினர் முழு அக்கறை எடுத்து தனியார் ஆக்கிரமிப்புகளை அகற்றியும், அமலை செடிகளை முழுவதுமாக அகற்றவும், குளங்களை தூர்வாரவும் செய்தால் இனி வரும் காலங்களில் இக்குளத்தில் கூடுதலாக நீர் நிரம்பி விவசாயம் செழிக்கும் என்று இப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
குப்பை தொட்டியாக மாறி வரும் பெரியகுளம்
கீழப்பாவூர் பெரியகுளத்தில் சுற்றியிருக்கும் பொதுமக்கள் தங்கள் வீட்டில் உள்ள கழிவுகளையும் பீடி இலை உள்ளிட்டவைகளை கொட்டி வருகின்றனர். இதனால் நீர் நிலை மாசுபடுவதோடு நாளடைவில் துர்நாற்றம் வீசி கொசுக்கள் உற்பத்தியாக நோய் பரவும் அபாய நிலை உள்ளது. எனவே பொதுமக்கள் வீட்டு கழிவுகளை குளத்தில் கொட்டுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாகும்.
- தினகரன் செய்தி
![]() |
Photo : Dinesh Kanna |

0 comments :