முகப்புத்தக நண்பர்களின் கேள்விகளுக்கான பேரூராட்சி தலைவரின் பதில்கள்
முகப்புத்தக நண்பர்களுக்கான கேள்விகளுக்கு நமது பேரூராட்சி மன்றத்தின் தலைவர் பொன்.அறிவழகன் அவர்கள் பதிலளித்துள்ளார்.
நண்பர்களின் கேள்விகளோடு பதில்கள் இணைக்கப்பட்டுள்ளன, மேலும் நண்பர்களின் ஆலோசனைகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நண்பர்களின் கேள்விகளோடு பதில்கள் இணைக்கப்பட்டுள்ளன, மேலும் நண்பர்களின் ஆலோசனைகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நண்பர் R.அன்புசிவில்:
கீழப்பாவூர் முழுவதும் தாமிரபரணி தண்ணீர் கிடைக்க வழிசெய்தால் நன்றாக இருக்கும்.
கீழப்பாவூர் முழுவதும் தாமிரபரணி தண்ணீர் கிடைக்க வழிசெய்தால் நன்றாக இருக்கும்.
பதில்:
கீழப்பாவூர் முழுவதும் தாமிரபரணி தண்ணீர் கிடைக்க ஏற்பாடு நடந்து கொண்டிருக்கிறது. தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் புதிதாக அரசால் போடப்பட்டுள்ளது. நம் பேரூராட்சியின் பங்காக சுமார் 132 லட்சம் கட்ட வேண்டும். தற்போது கடந்த
1 ஆண்டுக்குள் 41 லட்சம் கட்டியுள்ளோம். திட்டம் நடைமுறையில் உள்ளது.

நண்பர் சைலபதி ராமநாதன்:
முத்தாரம்மன் கோவில் தெருவில் எப்போது ரோடு போடுவீங்க?
நண்பர் குரு பிரனவ்:
முத்தாரம்மன் கோவில் வடக்கு மற்றும் தெற்கு தெரு மட்டும் தான் இன்னும் சரி பன்னாம இருக்கு. அதனால, அத சரி பன்றதுக்கு கொஞ்சம் நடவடிக்கை எடுங்க.

நண்பர் முத்துக்குமரன்:
நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பேங்க் ஸ்டாப் அருகே மறியல் செய்யப்படும்.
நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பேங்க் ஸ்டாப் அருகே மறியல் செய்யப்படும்.
பதில்:
முத்தாரம்மன் கோவில் வடக்குத் தெரு, சாமி கோயில் தெரு சிமெண்ட் சாலை போடுவதற்கு நிர்வாக அனுமதி (AS) பெறப்பட்டுள்ளது. விரைவில் சிமெண்ட் சாலை அமையும்.
நண்பர் முருகன்:
வீட்டிற்கு ஒரு மரம் வேண்டாம். ஆனால், ஒரு தெருவிற்கு குறைந்தது ஒரு மரமாவது நட்டு பராமரிக்க இயலுமா? நமது ஊரை பசுமை நிறந்த ஊராக மாற்ற முடியுமா? இதைச் செய்வதற்கு திட்டம் ஏது உள்ளதா?
வீட்டிற்கு ஒரு மரம் வேண்டாம். ஆனால், ஒரு தெருவிற்கு குறைந்தது ஒரு மரமாவது நட்டு பராமரிக்க இயலுமா? நமது ஊரை பசுமை நிறந்த ஊராக மாற்ற முடியுமா? இதைச் செய்வதற்கு திட்டம் ஏது உள்ளதா?
பதில்:
மரம் வளர்க்க யாரிடமும் கேட்க வேண்டாம். ஆர்வம் போதும்.
கீழப்பாவூர் இணையம்:
அம்மன் கோவில் பக்கம் உள்ள வாறுகால்களுக்கு மூடி அமைத்தல்.
அம்மன் கோவில் பக்கம் உள்ள வாறுகால்களுக்கு மூடி அமைத்தல்.
பதில்:
மைதானத்தில் உள்ள வாறுகால் மூடி அமைக்க ஆவண செய்யப்படும்.
நண்பர் செல்வன்:
நமது பேரூரட்சி அலுவலகத்தில் இருந்து பொதுமக்களுக்கு வீடு,கழிப்பறை கட்ட அரசு மானியம் ஏதும் உண்டா? விவசாயத்திற்கு எந்தெந்த பயிர்கள் பயிரிட்டால் மானியம் உண்டு? அப்படி மானியம் ஏதும் இருந்தால் மக்களுக்கு எப்படி விழிப்புணர்வு செய்துள்ளீர்கள்? எவ்வளவு மக்கள் அந்த மானியத்தை பயன்படுத்துகிறார்கள்.?

பேரூராட்சி பகுதிகளில் இலவச வீடு, கழிப்பறை கட்ட மானியம் இதுவரை இல்லை. கடந்த 2006 – 2011ம் ஆண்டுகளில் கழிவறை அமைக்க ரூ.1000 மட்டும் மானியமாக வழங்கப்பட்டது. சுமார் 100 பேர் பயன்பெற்றார்கள்.
நண்பர் ராஜ் ராஜன்:
சென்ட்ரல் பேங்க் பகுதியில் பொது கழிப்பிடம், நிழற்குடை அமைக்கப்படுமா?
சென்ட்ரல் பேங்க் பகுதியில் பொது கழிப்பிடம், நிழற்குடை அமைக்கப்படுமா?
பதில்:
சென்ட்ரல் பேங்க் அருகில் பொதுக் கழிப்பிடம் கட்ட, வட்ட கிணற்றுக்கு மேல் பக்கம் சிறிது இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் அமையும்.
நண்பர் ஞானசேகரன்:
ஊரணிக்கு தண்ணிர் வரும் அனைத்து வழிகளும்அடைக்கப்பட்டுவிட்டது.
இனி ஊரணிக்கு தண்ணிர் எப்படி வரும்? இதற்கு அடுத்தமுயற்சி என்ன?
ஊரணிக்கு தண்ணிர் வரும் அனைத்து வழிகளும்அடைக்கப்பட்டுவிட்டது.
இனி ஊரணிக்கு தண்ணிர் எப்படி வரும்? இதற்கு அடுத்தமுயற்சி என்ன?
பதில்:
ஊரணிக்கு தண்ணீர் பாதையை சென்ற வருடம் JCB மூலம் ஓரளவுக்கு வழி தடம் செய்யப்பட்ட்து. மக்கள் மீண்டும் மீண்டும் ஆக்கிரமிக்கிறார்கள். தற்போது இன்னும் கூடுதலாக சுகாதார கழிப்பிடம் 2 எண்ணம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அச்சமையம் நடைபயிற்சிக்கான நடைபாதையும் முழு வெற்றி பெறும். மரங்கள் சுமார் 10-க்கு மேல் வைத்து வளர்க்கப்பட்டு வருகிறது. சுற்றி போடப்பட்டுள்ள டியூப்லைட்டுகள் அனைத்தையும் உடைத்திருக்கிறாகள்.
நண்பர் ரமேஷ்கருப்பசாமி:
அரிசி ஆலைகளில் இருந்து வெளிவரும் சாம்பல்களை முழவதுமாக தடுக்க முடியுமா?
அரிசி ஆலைகளில் இருந்து வெளிவரும் சாம்பல்களை முழவதுமாக தடுக்க முடியுமா?
பதில்:
அரிசி ஆலைகளில் இருந்து வரும் சாம்பல்களை கட்டுப்படுத்துங்கள் என்று பல முறை நோட்டீஸ் மூலம் தெரியப்படுத்தப்பட்டிருக்கிறது. சுகாதாரத் துறைக்கும் தெரியப்படுத்தப்பட்டிருக்கிறது.
நண்பர் சேர்மக்கனி சிவலிங்கம்:
நம்ம ஊர்ல மின்சார சுடுகாடு எப்போ கொண்டுவருவிங்க?
நம்ம ஊர்ல மின்சார சுடுகாடு எப்போ கொண்டுவருவிங்க?
பதில்:
மின்சார தகன மேடை அமைய தற்போது சாத்தியமில்லை.
ஆலோசனைகள்:
நண்பர் செல்வராஜ் செல்வா:
அம்மன் கோவில் கிணறு, சாமி கோவில் கிணறு, தூர் வாரலாமே.. தண்ணீர் துர்நாற்றம் வீசுகிறது.
அம்மன் கோவில் கிணறு, சாமி கோவில் கிணறு, தூர் வாரலாமே.. தண்ணீர் துர்நாற்றம் வீசுகிறது.
நண்பர் கதிரேசபாண்டியன்:
குளத்தின் அருகில் இருக்கும் வட்ட கிணறில் மீண்டும் குடிநீர் கிணறாக மாற்ற ஆவண செய்ய முடியுமா?
நண்பர் தனசேகர் ராமசாமி:
கீழப்பாவூரில் இருந்து அடைக்கலப்பட்டணத்திற்கு மாறிய வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை மீண்டும் கீழப்பாவூரில் திறக்க முடியுமா?
கீழப்பாவூரில் இருந்து அடைக்கலப்பட்டணத்திற்கு மாறிய வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை மீண்டும் கீழப்பாவூரில் திறக்க முடியுமா?
வீடுகளில் குடிதண்ணீரை மோட்டார் மூலம் உறிஞ்சப்படுவதை தடுக்கும் முறையான வீட்டு இணைப்புகளில் உள்ள பைப்புகளில் குண்டு அமைத்தல் தற்போது பயன் இல்லாத நிலையில் உள்ளது.
நண்பர் ஞானசேகரன்:
குளத்தில் கலக்கும் கழிவுநீரை(சாக்கடை) வேறு வழியில் மாற்றிவிட முடியுமா?
குளத்தில் கலக்கும் கழிவுநீரை(சாக்கடை) வேறு வழியில் மாற்றிவிட முடியுமா?
அம்மன் கோவில் மைதானம் வழியாக பஸ் வசதி எப்போதுஏற்படுத்துவீர்.?
நண்பர் தமிழ் அரசன்:
காய்கறி சந்தை இல்லாத நம்மூர் கண் இல்லாத முகம் போல்காட்சியளிக்கிறது.
இருந்த ஒரு அடையாளத்தயைும் அனுப்பிவிட்டோமே.
காய்கறி சந்தை இல்லாத நம்மூர் கண் இல்லாத முகம் போல்காட்சியளிக்கிறது.
இருந்த ஒரு அடையாளத்தயைும் அனுப்பிவிட்டோமே.
நண்பர் தினேஷ் கண்ணா:
பி.ரா.சி. மண்டபம் அருகில் விழும் தாமிரபரணி தண்ணீர் இரவு நேரங்களிலும் மற்ற நேரங்களிலும் வீணாகிறது. அதை கொஞ்சம் உயரமாக நல்லி மாதிரி வைக்க முடியுமா?
பி.ரா.சி. மண்டபம் அருகில் விழும் தாமிரபரணி தண்ணீர் இரவு நேரங்களிலும் மற்ற நேரங்களிலும் வீணாகிறது. அதை கொஞ்சம் உயரமாக நல்லி மாதிரி வைக்க முடியுமா?
நண்பர் தங்கராஜா.T:
அறியாமையை போக்க அனைவரும் அறிந்து கொள்ளும்படியாக,
கீழப்பாவூர் பேருராட்சிக்கு மக்களுக்கு உரிய திட்டங்களையும், செயல்பாடுகளையும்,
சலுகைகளையும், சான்றிதல்களையும் பெறும் வழிமுறைகளையும்,
விதிமுறைகளையும், கட்டணங்களையும் பொது இடங்களில் விளம்பரபடுத்தும்படி
கேட்டு கொள்கிறோம்.

நண்பர் சதீஷ் ஸ்ரீரங்கன்:
கீழப்பாவூர் ஊருணியை சுற்றி அழகான பூக்கள் மற்றும் மரம் வச்சு அந்த இடத்த சுத்தமாக வைத்தால் காலையில் நடைபயிற்சிக்கு நல்லதாக அமையும்.
நண்பர் ராஜா:
நமது ஊரில் உள்ள அனைத்து தெருக்களுக்கும் பெயர் பலகை வைக்கலம்.
நமது ஊரில் உள்ள அனைத்து தெருக்களுக்கும் பெயர் பலகை வைக்கலம்.
நண்பர் மணிகண்டன்:
வார்டு உறுப்பினர்கள் அந்தந்த வர்டு மக்களின் குறையை நிவர்த்தி செய்ய வாரம் ஒருமுறை அல்லது பத்து நாளுக்கு ஒருமுறை அந்தந்த வார்டுகளிலேயே முகாம் நடத்தலாமே.. மற்றும் அந்தந்த வார்டு உறுப்பினர்களின் பணி என்ன?

நண்பர் மாடசாமி:
கீரைத்தோட்டத்தெருவில் வீட்டு தண்ணீர் இணைப்புகள் அனைத்தும் வீட்டிற்கு வெளியே அதுவும் ரோட்டில் இருந்து 2 அடி ஆழத்தில் உள்ள பைப்புகளில் இருந்துதான் குடிதண்ணீர் பிடிக்கப்படுகிறது. ஏன் இந்த அவல நிலை?மற்ற தெருக்களில் எல்லாம் குடிதண்ணீர் இணைப்புகள் வீட்டின் உள்ளயே இருக்கின்றது அதுவும் ரோடில் இருந்து 2 அடி உயரத்தில் இருக்கும் போது அங்கே விழும் தண்ணீரை விட கீரைத்தோட்டத்தெருவில் இருக்கும் அனைத்து வீடுகளிலும் ரோட்டில் இருக்கும் பைப்புகளில் விழவில்லை. மற்றும் மற்ற தெருக்களில் மிதமிஞ்சிய அளவுக்கு தண்ணீர் விழுகிறது அதே சமயத்தில் அந்த அளவுக்கு தண்ணீரும் வீணாக வெளியேறுகிறது. இந்த நிலையை மாற்ற முடியுமா?
நண்பர் சுரேஷ்:
கீரைத்தோட்டத்தெருவின் கிழக்கு ஓரத்தில், குளத்துப்பக்கத்தில் ஒத்தபனைமர அடியில் பனையடிசாமியும், பேச்சியம்மாள்சாமியும் இருந்து அருள் தருகின்றனர். கடந்த செப்டம்பர்.16-ந்தேதி இங்கு திருவிழா நடந்தது. அப்போது,சாமிக்கு அனைத்துவிதமான பூஜைகளும் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இருப்பினும் இங்கு எல்லோரும் அமர்ந்து சாப்பிட இயலவில்லை.ஏனென்றால், இங்கு சுற்றிலும் ஊரிலுள்ள கழிவுகள் அனைத்தும் இப்பகுதியில் வந்துதான் கலக்கின்றன. இதனால் துர்நாற்றம் அதிகம் வீசுகிறது. மேலும், குளத்தில் தண்ணீர் நிரம்பியபின் இந்த பகுதியில் இருந்த கழிவுநீர் இந்த கோவிலை சுற்றிலும் சுமார் அரை கிலோமீட்டர் தூரத்திற்கு படர்கிறது. இந்த காரணத்தால் பல வருடங்களாக இக்கோவிலுக்கு மக்கள் யாரும் வரவில்லை. இதனால், இங்கு கலக்கும் கழிவுநீரை இப்பகுதியில் கலக்காதவாறு செய்ய வேண்டும். அல்லது குளத்தின் கரையில் இருந்து சுமார் 200 மீட்டர் தூரத்திற்கு வாறுகால் அமைத்து கழிவுநீரை தூரத்தில் கொண்டு செல்லலாமே?
இப்பகுதியில் ஒரு அடிகுழாய் உள்ளது. ஒரு காலத்தில் இந்த அடிகுழாய் மக்கள் பயன்பாட்டுக்கு நல்ல தண்ணீரக இருந்து வந்துள்ளது. நாளடைவில் இப்பகுதியில் கழிவுநீர் அதிகமாக அதிகமாக இந்த அடிகுழாய் தண்ணீர் மக்கள் பயன்படுத்த முடியாதபடி மாசடைந்து, அந்த அடிகுழாயே சீர்குலைந்துள்ளது. மேலும், இக்கழிவு நீரால் அப்பகுதியில் ஒரு காலத்தில் குடிநீராக மக்கள் பயன்பாட்டில் இருந்த வட்டகிணறு, சாஸ்தா கோவில் கிணறு ஆகியவற்றின் தண்ணீரும் தற்போது மாசடைந்துள்ளது. இந்த அவல நிலையை கூடிய சீக்கிரம் தீர்க்க முடியுமா? மக்கள் பயன்பாட்டுக்கு இந்த கிணறுகள் மற்றும் கோவிலை கொண்டு வர முடியுமா?
நண்பர் ஜெயராஜ்:
நமது ஊரின் நடுவில் இருக்கும் ஊர் தோப்பில் அதிகமான புளியமரங்களும் உள்ளது. அதே சமயத்தில் அங்கு ஏராளமான குப்பைக் கூளங்களும் உள்ளன. அப்பகுதியை சுற்றி ஏராளமான வீடுகள் உள்ளது. இந்த 10 ஆண்டுகளில் அப்பகுதியை கொஞ்சம் கொஞ்சமாக சுத்தப்படுத்தி வருவதை பாராட்டுகிறோம். இருப்பினும், குப்பைகள் நிறைந்த அந்த பகுதியில் மழை காலத்தில் அதிகமாக துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசு உற்பத்தியும் அதிகமாகிறது. இதனால் அப்பகுதியை சுற்றிலும் நோய் பரவ வாய்ப்புள்ளது. ஆகையால், அப்பகுதிக்கு கூடுதல் கவனம் செலுத்தி விரைவாக அதை தூய்மைப்படுத்தி அங்கு நடைப்பயிற்சி பாதை, சிறுவர்கள் விளையாடி மகிழ பூங்கா அமைத்து தந்தால் நல்லதாக இருக்கும்.
நமது ஊரில் உள்ள மதுபானக்கடைகளை அகற்ற எதாவது வழி இருக்கா??
ReplyDeleteஅப்படி இருந்தால் அதை அகற்ற முடிவெடுக்கப்படுமா??
இதனால் பள்ளி மாணவர்களும் அடிமையாகின்றனர்.<
மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் வைத்து நல்ல முடிவு
எடுத்தால் நன்றாக இருக்கும்..=