.

திறனாய்வு தேர்வில் கீழப்பாவூர் நாடார் இந்து உயர்நிலைப்பள்ளி மாணவன் தேர்ச்சி

திறனாய்வு தேர்வில் கீழப்பாவூர் நாடார் இந்து உயர்நிலைப்பள்ளி மாணவன் தேர்ச்சி பெற்றுள்ளார்

கிராமப்புற மாணவர்களுக்கான திறனாய்வு தேர்வு பாவூர் சத்திரம் த.பி.சொக்கலால் அரசு   ண்கள் மேல்நிலைப்பள்ளியில் வைத்து நடைபெற்றது. இதில் பல்வேறு பள்ளிகள் சார்பில் நூற்றூக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.  இத்தேர்வில் கீழப்பாவூர் நாடார் இந்து உயர்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் முகிலன் திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இதற்கு முந்தைய கல்வியாண்டில் இதே தேர்வில் சிரஞ்சீவி என்ற மாணவனும், ரஞ்சனி என்ற மாணவியும் தேர்ச்சி பெற்று அரசின் நிதியுதவியை பெற்று வருகின்றனர்.  
                    இப்பள்ளி மாணவர்கள் தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர். தேர்வில் பெற்ற பெற்ற மாணவனை பள்ளியின் முகவர் ஆறுமுக செல்வன், செயலர் செல்லம்மாள், ஆசிரியை மஞ்சு செல்வம் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள், அலுவலர்கள் பாராட்டினர்.

Reporter: Pirammanayagam

0 comments :