.

கீழப்பாவூரில் குறுகிய கால மீன்பாசி குத்தகை ஏலம் விட விவசாயிகள் எதிர்ப்பு: ஏலம் ஒத்தி வைப்பு

கீழப்பாவூரில் குறுகிய கால மீன்பாசி குத்தகை ஏலம் விட விவசாயிகள் எதிர்ப்பு: ஏலம் ஒத்தி வைப்பு


கீழப்பாவூர் பெரியகுளத்தில் குறுகிய காலத்திற்கு மீன்பாசி குத்தகை ஏலம் விட விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து மீன்பாசி குத்தகை ஏலம் மறு தேதி அறிவிக்கப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
  சிற்றாறு பாசனத்தின் கீழ் உள்ள கீழப்பாவூர் பெரிய குளம் 5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நிரம்பி மறுகால் பாய்ந்துள்ளது. இதனால் மகிழச்சி அடைந்த விவசாயிகள் பாசனப்பரப்பு முழுவதும் நெல் பயிரிட்டுள்ளனர்.
இந்நிலையில், வருவாய்த்துறை சார்பில் கீழப்பாவூர் பெரியகுளத்திற்கான மீன்பாசி குத்தகை ஏலம் செவ்வாய்க்கிழமை கிராம நிர்வாக அலுவலகத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது இதில் 37 பேர் மீன்பாசி குத்தகை ஏலத்திற்காக முன்பணம் கட்டியிருந்தனர். ஏலம் வெளிப்படையாக நடக்க வேண்டும் என்பதற்காக கிராம நி்ர்வாக அலுவலகம் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ஆனால் வருவாய்த்துறை சார்பில் 1424ம் பசலி ஆண்டிற்கு மட்டுமே குத்தகை என அறிவிக்கப்பட்டிருந்தது. 

இதனால் குத்தகை முடிவடையும் தேதி 30.6.2015 என தெரியவந்ததால் விவசாயிகள் ஏலம் விடப்படும் இடம் முன்பு கூடி குறுகிய காலத்திற்கு குத்தகை விட்டால் நெல் சாகுபடி முடிந்து, பல்லாரி சாகுபடி பாதிக்கப்படும் என அச்சம் தெரிவித்தனர்.
  இதனைத்தொடர்ந்து வருவாய்த்துறை சார்பில் மீன்பாசி குத்தகைக்கான ஏலம் விடப்பட்டது. ஆனால் மீன்பாசி குத்தகைக்கு ஏலத்திற்கு பணம் கட்டியவர்கள் யாரும் ஏலத்தொகை கேட்காததால் ஏலம் மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
  பின்னர் ஏலத்தில் கலந்து கொண்டவர்கள் கீழப்பாவூர் பெரியகுளம் பாசன விவசாயிகள் நலன்கருதி மீன்பாசி குத்தகை காலத்தை ஒரு வருடத்திற்கு நீடித்து ஏலம் விடக்கோரி வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

Reporter:  Pirammanayagam

0 comments :