.

All About Keelapavoor

Showing posts with label Bussiness. Show all posts

முகப்புத்தக நண்பர்களின் கேள்விகளுக்கான பேரூராட்சி தலைவரின் பதில்கள்

முகப்புத்தக நண்பர்களுக்கான கேள்விகளுக்கு நமது பேரூராட்சி மன்றத்தின் தலைவர் பொன்.அறிவழகன் அவர்கள் பதிலளித்துள்ளார்.
நண்பர்களின் கேள்விகளோடு பதில்கள் இணைக்கப்பட்டுள்ளன, மேலும் நண்பர்களின் ஆலோசனைகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.



நண்பர் R.அன்புசிவில்: 
கீழப்பாவூர் முழுவதும் தாமிரபரணி தண்ணீர் கிடைக்க வழிசெய்தால் நன்றாக இருக்கும்.

பதில்: 
கீழப்பாவூர் முழுவதும் தாமிரபரணி தண்ணீர் கிடைக்க ஏற்பாடு நடந்து கொண்டிருக்கிறது. தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் புதிதாக அரசால் போடப்பட்டுள்ளது. நம் பேரூராட்சியின் பங்காக சுமார் 132 லட்சம் கட்ட வேண்டும். தற்போது கடந்த 
1 ஆண்டுக்குள் 41 லட்சம் கட்டியுள்ளோம். திட்டம் நடைமுறையில் உள்ளது.

நண்பர் சைலபதி ராமநாதன்: 
முத்தாரம்மன் கோவில் தெருவில் எப்போது ரோடு போடுவீங்க?

நண்பர் குரு பிரனவ்
முத்தாரம்மன் கோவில் வடக்கு மற்றும் தெற்கு தெரு மட்டும் தான் இன்னும் சரி பன்னாம இருக்கு. அதனால, அத சரி பன்றதுக்கு கொஞ்சம் நடவடிக்கை எடுங்க.

நண்பர் முத்துக்குமரன்:
நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பேங்க் ஸ்டாப் அருகே மறியல் செய்யப்படும்.

பதில்: 
முத்தாரம்மன் கோவில் வடக்குத் தெரு, சாமி கோயில் தெரு சிமெண்ட் சாலை போடுவதற்கு நிர்வாக அனுமதி (AS) பெறப்பட்டுள்ளது. விரைவில் சிமெண்ட் சாலை அமையும்.

நண்பர் முருகன்: 
வீட்டிற்கு ஒரு மரம் வேண்டாம்ஆனால்ஒரு தெருவிற்கு குறைந்தது ஒரு மரமாவது நட்டு பராமரிக்க இயலுமாநமது ஊரை பசுமை நிறந்த ஊராக மாற்ற முடியுமாஇதைச் செய்வதற்கு திட்டம் ஏது உள்ளதா?

பதில்: 
மரம் வளர்க்க யாரிடமும் கேட்க வேண்டாம். ஆர்வம் போதும்.


கீழப்பாவூர் இணையம்: 
அம்மன் கோவில் பக்கம் உள்ள வாறுகால்களுக்கு மூடி அமைத்தல்.


பதில்: 
மைதானத்தில் உள்ள வாறுகால் மூடி அமைக்க ஆவண செய்யப்படும்.

நண்பர் செல்வன்: 
நமது பேரூரட்சி அலுவலகத்தில் இருந்து பொதுமக்களுக்கு வீடு,கழிப்பறை கட்ட அரசு மானியம் ஏதும் உண்டாவிவசாயத்திற்கு எந்தெந்த பயிர்கள் பயிரிட்டால் மானியம் உண்டுஅப்படி மானியம் ஏதும் இருந்தால் மக்களுக்கு எப்படி விழிப்புணர்வு செய்துள்ளீர்கள்எவ்வளவு மக்கள் அந்த மானியத்தை பயன்படுத்துகிறார்கள்.?

பதில்: 
பேரூராட்சி பகுதிகளில் இலவச வீடு, கழிப்பறை கட்ட மானியம் இதுவரை இல்லை. கடந்த 2006 – 2011ம் ஆண்டுகளில் கழிவறை அமைக்க ரூ.1000 மட்டும் மானியமாக வழங்கப்பட்டது. சுமார் 100 பேர் பயன்பெற்றார்கள்.

நண்பர் ராஜ் ராஜன்: 
சென்ட்ரல் பேங்க் பகுதியில் பொது கழிப்பிடம், நிழற்குடை அமைக்கப்படுமா?

பதில்: 
சென்ட்ரல் பேங்க் அருகில் பொதுக் கழிப்பிடம் கட்ட, வட்ட கிணற்றுக்கு மேல் பக்கம் சிறிது இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் அமையும்.

நண்பர் ஞானசேகரன்: 
ஊரணிக்கு தண்ணிர் வரும் அனைத்து வழிகளும்அடைக்கப்பட்டுவிட்டது. 
இனி ஊரணிக்கு தண்ணிர் எப்படி வரும்இதற்கு அடுத்தமுயற்சி என்ன?

பதில்: 
ஊரணிக்கு தண்ணீர் பாதையை சென்ற வருடம் JCB மூலம் ஓரளவுக்கு வழி தடம் செய்யப்பட்ட்து. மக்கள் மீண்டும் மீண்டும் ஆக்கிரமிக்கிறார்கள். தற்போது இன்னும் கூடுதலாக சுகாதார கழிப்பிடம் 2 எண்ணம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அச்சமையம் நடைபயிற்சிக்கான நடைபாதையும் முழு வெற்றி பெறும். மரங்கள் சுமார் 10-க்கு மேல் வைத்து வளர்க்கப்பட்டு வருகிறது. சுற்றி போடப்பட்டுள்ள டியூப்லைட்டுகள் அனைத்தையும் உடைத்திருக்கிறாகள்.

நண்பர் ரமேஷ்கருப்பசாமி:
அரிசி ஆலைகளில் இருந்து வெளிவரும் சாம்பல்களை முழவதுமாக தடுக்க முடியுமா?

பதில்: 
அரிசி ஆலைகளில் இருந்து வரும் சாம்பல்களை கட்டுப்படுத்துங்கள் என்று பல முறை நோட்டீஸ் மூலம் தெரியப்படுத்தப்பட்டிருக்கிறது. சுகாதாரத் துறைக்கும் தெரியப்படுத்தப்பட்டிருக்கிறது.

நண்பர் சேர்மக்கனி சிவலிங்கம்
நம்ம ஊர்ல மின்சார சுடுகாடு எப்போ கொண்டுவருவிங்க?

பதில்: 
மின்சார தகன மேடை அமைய தற்போது சாத்தியமில்லை.



ஆலோசனைகள்:


நண்பர் செல்வராஜ் செல்வா: 
அம்மன் கோவில் கிணறு, சாமி கோவில் கிணறு, தூர் வாரலாமே.. தண்ணீர் துர்நாற்றம் வீசுகிறது.


நண்பர் கதிரேசபாண்டியன்: 
குளத்தின் அருகில் இருக்கும் வட்ட கிணறில் மீண்டும் குடிநீர் கிணறாக மாற்ற ஆவண செய்ய முடியுமா?


நண்பர் தனசேகர் ராமசாமி: 
கீழப்பாவூரில் இருந்து அடைக்கலப்பட்டணத்திற்கு மாறிய வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை மீண்டும் கீழப்பாவூரில் திறக்க முடியுமா?

வீடுகளில் குடிதண்ணீரை மோட்டார் மூலம் உறிஞ்சப்படுவதை தடுக்கும் முறையான வீட்டு இணைப்புகளில் உள்ள பைப்புகளில் குண்டு அமைத்தல் தற்போது பயன் இல்லாத நிலையில் உள்ளது.


நண்பர் ஞானசேகரன்: 
குளத்தில் கலக்கும் கழிவுநீரை(சாக்கடைவேறு வழியில் மாற்றிவிட முடியுமா?

அம்மன் கோவில் மைதானம்  வழியாக பஸ் வசதி எப்போதுஏற்படுத்துவீர்.?


நண்பர் தமிழ் அரசன்:
காய்கறி சந்தை இல்லாத நம்மூர் கண் இல்லாத முகம் போல்காட்சியளிக்கிறது. 
இருந்த ஒரு அடையாளத்தயைும் அனுப்பிவிட்டோமே.


நண்பர் தினேஷ் கண்ணா: 
பி.ரா.சி. மண்டபம் அருகில் விழும் தாமிரபரணி தண்ணீர் இரவு நேரங்களிலும் மற்ற நேரங்களிலும் வீணாகிறது. அதை கொஞ்சம் உயரமாக நல்லி மாதிரி வைக்க முடியுமா?


நண்பர் தங்கராஜா.T: 
அறியாமையை போக்க அனைவரும் அறிந்து கொள்ளும்படியாக,
கீழப்பாவூர் பேருராட்சிக்கு மக்களுக்கு உரிய திட்டங்களையும், செயல்பாடுகளையும்,
சலுகைகளையும், சான்றிதல்களையும் பெறும் வழிமுறைகளையும்,
விதிமுறைகளையும், கட்டணங்களையும் பொது இடங்களில் விளம்பரபடுத்தும்படி 
கேட்டு கொள்கிறோம்.


நண்பர் சதீஷ் ஸ்ரீரங்கன்: 
கீழப்பாவூர் ஊருணியை சுற்றி அழகான பூக்கள் மற்றும் மரம் வச்சு அந்த இடத்த சுத்தமாக வைத்தால் காலையில் நடைபயிற்சிக்கு நல்லதாக அமையும்.


நண்பர் ராஜா: 
நமது ஊரில் உள்ள அனைத்து தெருக்களுக்கும் பெயர் பலகை வைக்கம்.


நண்பர் மணிகண்டன்: 
வார்டு உறுப்பினர்கள் அந்தந்த வர்டு மக்களின் குறையை நிவர்த்தி செய்ய வாரம் ஒருமுறை அல்லது பத்து நாளுக்கு ஒருமுறை அந்தந்த வார்டுகளிலேயே முகாம் நடத்தலாமே.. மற்றும் அந்தந்த வார்டு உறுப்பினர்களின் பணி என்ன?


நண்பர் மாடசாமி: 
கீரைத்தோட்டத்தெருவில் வீட்டு தண்ணீர் இணைப்புகள் அனைத்தும் வீட்டிற்கு வெளியே அதுவும் ரோட்டில் இருந்து அடி ஆழத்தில் உள்ள பைப்புகளில் இருந்துதான் குடிதண்ணீர் பிடிக்கப்படுகிறது. ஏன் இந்த அவல நிலை?மற்ற தெருக்களில் எல்லாம் குடிதண்ணீர் இணைப்புகள் வீட்டின் உள்ளயே இருக்கின்றது அதுவும் ரோடில் இருந்து அடி உயரத்தில் இருக்கும் போது அங்கே விழும் தண்ணீரை விட கீரைத்தோட்டத்தெருவில் இருக்கும் அனைத்து வீடுகளிலும் ரோட்டில் இருக்கும் பைப்புகளில் விழவில்லைமற்றும் மற்ற தெருக்களில் மிதமிஞ்சிய அளவுக்கு தண்ணீர் விழுகிறது அதே சமயத்தில் அந்த அளவுக்கு தண்ணீரும் வீணாக வெளியேறுகிறது. இந்த நிலையை மாற்ற முடியுமா?


நண்பர் சுரேஷ்: 
கீரைத்தோட்டத்தெருவின் கிழக்கு ஓரத்தில்குளத்துப்பக்கத்தில் ஒத்தபனைமர அடியில் பனையடிசாமியும்பேச்சியம்மாள்சாமியும் இருந்து அருள் தருகின்றனர். கடந்த செப்டம்பர்.16-ந்தேதி இங்கு திருவிழா நடந்தது. அப்போது,சாமிக்கு அனைத்துவிதமான பூஜைகளும் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இருப்பினும் இங்கு எல்லோரும் அமர்ந்து சாப்பிட இயலவில்லை.ஏனென்றால்இங்கு சுற்றிலும் ஊரிலுள்ள கழிவுகள் அனைத்தும் இப்பகுதியில் வந்துதான் கலக்கின்றனஇதனால் துர்நாற்றம் அதிகம் வீசுகிறது. மேலும்குளத்தில் தண்ணீர் நிரம்பியபின் இந்த பகுதியில் இருந்த கழிவுநீர் இந்த கோவிலை சுற்றிலும் சுமார் அரை கிலோமீட்டர் தூரத்திற்கு படர்கிறது. இந்த காரணத்தால் பல வருடங்களாக இக்கோவிலுக்கு மக்கள் யாரும் வரவில்லை. இதனால்இங்கு கலக்கும் கழிவுநீரை இப்பகுதியில் கலக்காதவாறு செய்ய வேண்டும்அல்லது குளத்தின் கரையில் இருந்து சுமார் 200 மீட்டர் தூரத்திற்கு வாறுகால் அமைத்து கழிவுநீரை தூரத்தில் கொண்டு செல்லலாமே?
இப்பகுதியில் ஒரு அடிகுழாய் உள்ளதுஒரு காலத்தில் இந்த அடிகுழாய் மக்கள் பயன்பாட்டுக்கு நல்ல தண்ணீரக இருந்து வந்துள்ளதுநாளடைவில் இப்பகுதியில் கழிவுநீர் அதிகமாக அதிகமாக இந்த அடிகுழாய் தண்ணீர் மக்கள் பயன்படுத்த முடியாதபடி மாசடைந்துஅந்த அடிகுழாயே சீர்குலைந்துள்ளதுமேலும், இக்கழிவு நீரால் அப்பகுதியில் ஒரு காலத்தில் குடிநீராக மக்கள் பயன்பாட்டில் இருந்த வட்டகிணறுசாஸ்தா கோவில் கிணறு ஆகியவற்றின் தண்ணீரும் தற்போது மாசடைந்துள்ளதுஇந்த அவல நிலையை கூடிய சீக்கிரம் தீர்க்க முடியுமாமக்கள் பயன்பாட்டுக்கு இந்த கிணறுகள் மற்றும் கோவிலை கொண்டு வர முடியுமா?


நண்பர் ஜெயராஜ்: 
நமது ஊரின் நடுவில் இருக்கும் ஊர் தோப்பில் அதிகமான புளியமரங்களும் உள்ளது. அதே சமயத்தில் அங்கு ஏராளமான குப்பைக் கூளங்களும் உள்ளன. அப்பகுதியை சுற்றி ஏராளமான வீடுகள் உள்ளது. இந்த 10 ஆண்டுகளில் அப்பகுதியை கொஞ்சம் கொஞ்சமாக சுத்தப்படுத்தி வருவதை பாராட்டுகிறோம். இருப்பினும், குப்பைகள் நிறைந்த அந்த பகுதியில் மழை காலத்தில் அதிகமாக துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசு உற்பத்தியும் அதிகமாகிறது. இதனால் அப்பகுதியை சுற்றிலும் நோய் பரவ வாய்ப்புள்ளது. ஆகையால், அப்பகுதிக்கு கூடுதல் கவனம் செலுத்தி விரைவாக அதை தூய்மைப்படுத்தி அங்கு நடைப்பயிற்சி பாதை, சிறுவர்கள் விளையாடி மகிழ பூங்கா அமைத்து தந்தால் நல்லதாக இருக்கும்.
Learn more »

வருவாய் தரும் கோழி வளர்ப்பு!

கால்நடை வளர்ப்பு தொழிலில் தமிழகத்தில் பொதுவாக அனைவரின் பங்களிப்பும் இருப்பது கோழி வளர்ப்பில்தான். பசு, ஆடு, முயல் வளர்ப்பு போன்றவற்றைக் காட்டிலும் கோழி வளர்ப்பு மிக எளிது. இறைச்சிக்கான பிராய்லர் கோழி வளர்ப்பு பெரிய பண்ணைகளுடன் முடிந்துவிடுகிறது. ஆனால், நாட்டுக்கோழி வளர்ப்பு வீடுதோறும் இருந்து வருகிறது.
எனினும், நாட்டுக்கோழியையும் சிறிய பண்ணை முறையில் வளர்த்தால் அதிக லாபம் பெறலாம். தரமான நாட்டுக்கோழி முட்டைகளைத் தேர்ந்தெடுத்து, கருவிகள் மூலம் நாமே பொரிக்கச் செய்து குஞ்சுகளை உற்பத்தி செய்யலாம். முட்டைகளை அடைகாக்க இன்குபேட்டர் மெஷின், அடை காத்த முட்டைகளைப் பொரிக்கச் செய்ய கேட்சர் மெஷின் ஆகியவற்றையும் பயன்படுத்தலாம். புதிதாக தொழில் தொடங்குவோர் குறைந்த முதலீட்டில் நாட்டுக்கோழிக் குஞ்சுகளை வாங்கி வளர்ப்பதே சிறந்தது.
கரையான்கள் கொடுக்கலாம்:  முதன்முதலாக கோழி வளர்ப்பில் ஈடுபட விரும்புவோர் தோட்டங்களில் 20 முதல் 50 கோழிக்குஞ்சுகளை 10 கூடுகளைப் பயன்படுத்தி வளர்த்துப் பார்க்கலாம். நாட்டுக்கோழிகள் வளர்ப்பில் பராமரிப்பு மிகவும் முக்கிய இடம் பெறுகிறது. பொதுவாக வேறு பறவைகள் மூலம்தான் கோழிகளுக்கு நோய் பரவும் ஆபத்து உள்ளதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
முதல் 48 நாள்களுக்கு புரோட்டின் அதிகமுள்ள தீவனங்களை மட்டுமே குஞ்சுகளுக்கு கொடுக்க வேண்டும். அதன் பிறகு தீவனத்துடன் கீரை, கரையான்களைக் கலந்து கொடுக்கலாம். எடை அதிகரிக்க குஞ்சுகளின் வளர்ச்சிக்கு ஏற்றபடி பனங்கருப்பட்டியை நீரில் கலந்துகொடுக்கலாம்.
கேரட், பெரிய வெங்காயம் போன்றவற்றைப் பொடியாக நறுக்கி தீவனத்துடன் கொடுக்கலாம். 45 நாள்களுக்கு மேல் கடைசிவரை ஏதாவது ஒரு கீரை வகையைப் பொடியாக நறுக்கி மதியத்துக்கு மேல் கோழிகளுக்கு கொடுக்கலாம். இதனால் தீவனச்செலவு குறையும். கறியின் ருசி அதிகரிக்கும்.
கோழிக் கூண்டுகளிலும் பண்ணைகளில் பயன்படுத்துவதைப்போல தேங்காய் நார்க்கழிவு அல்லது மரத்தூள் சுமார் ஒன்றரை முதல் 2 இஞ்ச் அளவுக்கு பரப்பி கொள்ள வேண்டும். இவை கெட்டியாகாமலிருக்க அடிக்கடி கிளறிவிட வேண்டும். கோழிகள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு கொத்துவதைத் தவிர்க்க, 20 முதல் 30 நாள்களுக்குள்ளாக குஞ்சுகளின் மூக்கு நுனியை வெட்ட வேண்டும்.
மொத்தமாக 80 முதல் 100 நாள்களில் சேவல், கோழிகளை விற்பனைக்கு அனுப்ப முடியும். இறைச்சி விற்பனையாளர்கள், ஹோட்டல்கள் போன்றவை நாட்டுக்கோழிகளை நேரடியாக வாங்கிச்செல்லும் நிலை உள்ளது. இதன் மூலம் அதிக வருவாய் பெறலாம்.
நாட்டுக்கோழி வளர்ப்பு, அதுகுறித்த கூடுதல் விவரங்களை விவசாயிகள் அறிந்துகொள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஸ்ரீபுரம், திருநெல்வேலி என்ற முகவரிக்கு நேரில் சென்று பல்கலைக்கழகட்க் பேராசிரியர்களைச் சந்தித்து விளக்கம் பெறலாம்.

Dinamani
Learn more »

தமிழக அரசின் புதிய திட்டத்தில் இளைஞர்கள் தொழில் தொடங்க விண்ணப்பங்கள் வினியோகம்

தமிழக அரசின் புதிய திட்டத்தில் இளைஞர் தொழில் தொடங்க விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது என்று மாவட்ட கலெக்டர் மு.கருணாகரன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:–
“முதல் தலைமுறை“ இளைஞர்கள்
பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐ.டி.ஐ. படித்த “முதல் தலைமுறை“ இளைஞர்களுக்கு உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில்கள் தொடங்குவதற்காக திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் (அதிக பட்சம் ரூ.25 லட்சம் வரை) தமிழக அரசு மானியத்துடன் திட்ட மதிப்பீடு ரூ.1 கோடி வரையிலான தொழில் திட்டங்களுக்கு வங்கிகள் மூலம் கடன் வழங்கும் “நீட்ஸ்“ என்ற புதிய திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.
21 முதல் 35 வயது வரை (பெண்கள், ஆதிதிராவிடப் பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பின்தங்கிய வகுப்பினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுபான்மையினர் ஆகியோருக்கு அதிகபட்ச வயது 45) இந்த திட்டத்தில் கடனுதவி கேட்டு விண்ணப்பிக்கலாம்.
வியாபாரம், வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த சேவை தொழில்களுக்கு இந்த திட்டத்தின் கடன் பெற தகுதி இல்லை. மாவட்ட தொழில் மையத்தில் இலவசமாக விண்ணப்பங்களை பெற்று சமர்ப்பிக்கலாம்.
நேர்காணல்
அந்த மனுக்கள் மாவட்ட கலெக்டர் தலைமையில், முன்னோடி வங்கி மேலாளர், நெல்ட்சியா அமைப்பின் பிரதிநிதி, தாட்கோ மேலாளர், டி.ஜ.ஜ.சி. கிளை மேலாளர், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர், அரசு என்ஜினீயரிங் கல்லூரி முதல்வர், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ஆகியோர் அடங்கிய குழுவால் நேர்காணல் நடத்தப்படும். தகுதியான மனுக்கள் வங்கி கடனுக்கு பரிந்துரை செய்யப்படும். 50 சதவீதம் பெண்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
வங்கிகளில் இருந்து கடன் அனுமதி கடிதம் கிடைத்த பின்னர், சென்னை தொழில் முனைவோர் பயிற்சி நிறுவனம் வழியாக ஒரு மாதம் கட்டாய மேலாண்மை பயிற்சி வழங்கப்படும். பயிற்சிக்கு பின்னர் திட்ட முதலீட்டில் 5 சதவீதம் செலுத்தி வங்கியின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நிதியுதவி பெறும்போது, மாவட்ட தொழில் மையம் அவருக்கு தகுதி வாய்ந்த 25 சதவீத மானிய தொகையை அரசு விதிகளின் படி வங்கிக்கு விடுவிப்பு செய்கிறது.
நீட்ஸ் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறும் தொழில் முனைவோருக்கு சிட்கோ, சிப்காட் போன்ற அரசு தொழிற்பேட்டைகளில் ஒதுக்கீடுக்கான முன்னுரிமை வழங்கப்படுகிறது. நீட்ஸ் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 25 சதவீதம் மானியத்துடன் கீழ்காணும் மானியங்களும் வழங்கப்படும்.
மானியம்
குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு நிறுவனங்கள் உற்பத்தி தொடங்கி முதல் 6 ஆண்டுகளுக்கு நிறுவனம் செலுத்திய வாட் வரி முழுவதும் மானியமான வழங்கப்படுகிறது. குறைந்த அழுந்த மின்சாரம் பயன்படுத்தும் தொழில் நிறுவனங்களுக்கு உற்பத்தி தொடங்கிய முதல் 3 ஆண்டுகளுக்கு, மின் கட்டணத்தில் 20 சதவீதம் குறைந்த அழுத்த மின் மானியம் வழங்கப்படுகிறது. மின்னாக்கி மானியம், முறையாக கடன் தவணையை செலுத்துபவர்களுக்கு வட்டி தொகையில் 3 சதவீதம் பின்முனை வட்டி மானியமாக வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் தொழில் தொடங்க ஆர்வம் உள்ள முதல் தலைமுறை தொழில் முனைவோர்கள் பொது மேலாளர், நெல்லை மாவட்ட தொழில் மைய அலுவலகத்தை அணுகி இலவசமாக விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளலாம். 0462-2572384, 2572162 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு நெல்லை மாவட்ட கலெக்டர் மு.கருணாகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

News In: Daily Thanthi

Learn more »

கம்ப்யூட்டர் உதவியுடன் வடிவமைப்பு பயிற்சி நெல்லையில் 15-ந் தேதி தொடங்குகிறது

நெல்லையில் இந்திய அரசின் கம்ப்யூட்டர் உதவியுடன் வடிவமைப்பு என்ற வேலைவாய்ப்பு பயிற்சி வருகிற 15-ந்தேதி தொடங்குகிறது.
தொழில்நுட்ப பயிற்சி
இந்திய அரசு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சி அமைச்சகம் நெல்லை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சி நிலையம் (கிளை), தென் மாவட்டங்களில் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்காக தொழில் பயிற்சிகள் நடத்தி வருகிறது. தற்போது நவீன மாற்றங்களுக்கு ஏற்ப புதிய தொழில் நுட்ப பயிற்சியான கணினி உதவியுடன் வடிவமைப்பு பயிற்சியை வருகிற 15-ந் தேதி தொடங்க உள்ளது. இந்த பயிற்சி 30 நாட்கள் நடைபெறுகிறது. கணினி உதவியுடன் வடிவமைப்பு அறிமுகம், அடிப்படை தொழில் நுட்பம், எடிட்டிங், ப்ளாட்டிங் தொழில் நுட்பம், 2டி டயமென்சன் என்பன போன்ற தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
15-ந் தேதி
தொழிற்கல்வியில் இயந்திரவியல், சிவில், மின்னியல் ஆகிய பிரிவுகளில் படிப்பவர்களுக்கும், தொழிற்கல்வி முடித்து வேலைக்காக காத்திருப்பவர்களும், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வேலைவாய்ப்புகளை பெறுவதற்கு இப்பயிற்சி பயன்படும். பயிற்சியின் முடிவில் இந்திய அரசு சான்றிதழ் வழங்கப்படுகிறது. 18 வயது நிரம்பியவர்கள் இப்பயிற்சியில் கலந்து கொள்ளலாம். உச்ச வயது வரம்பு ஏதும் கிடையாது.
பயிற்சி பெற விரும்புபவர்கள் வருகிற 15-ந் தேதி காலை 10 மணிக்கு ‘ஸ்பைஸ் சி.என்.சி இன்ஸ்டியூட், 262 இ, திருச்செந்தூர் சாலை (முருகன்குறிச்சி சிக்னல் அருகில்) பாளையங்கோட்டை‘ என்ற முகவரிக்கு நேரில் வர வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு...
வரும்போது, 2 பாஸ்போர்ட் அளவு போட்டோ, ரேசன் கார்டு நகல், மாற்றுச்சான்றிதழ் நகல், பயிற்சி கட்டணத்திற்கான டிமாண்ட் டிராப்ட் ஆகியவற்றை கண்டிப்பாக கொண்டு வரவேண்டும். எஸ்.சி\எஸ்.டி பிரிவினருக்கு 50 சதவீதம் கட்டணச்சலுகை வழங்கப்படுகிறது.
இதுபற்றி மேலும் விபரங்கள் அறிய 9965028051, 9443726872, 0462-2342137 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை சிறு, குறு தொழில் மைய நெல்லை உதவி இயக்குனர் லெ.குட்டிராஜா தெரிவித்துள்ளார்.
Learn more »

பால் பண்ணை தொழில் செய்து முன்னேற வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஆன்லைன் படிப்பு

பால் பண்ணை தொழில் செய்து முன்னேற வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஆன்லைன் படிப்பு அறிமுகப்படுத்தியுள்ளது.
இத்தொழிலில் தகுதி மற்றும் தொழில் திறமையுடைய வல்லுனர்கள் இணைந்து இந்த ஆன்லைன் படிப்பை வழங்குகின்றனர்.

இப்படிப்பில், கறவை மாடுகள் மற்றும் அதன் மேலாண்மை பற்றி தெரிந்து கொள்ள விரும்புவோர் இந்த ஆன்லைன் படிப்பில் சேர்ந்து பயன் பெறலாம்.
பால் பண்ணை குறித்து முக்கிய அம்சங்கள் மற்றும் நடைமுறைகளை ஒருங்கே இணைத்து பல்வேறு பாடப்பிரிவுகள் வழங்கப்படுகின்றன.
இது குறித்து, விரிவாக தெரிந்து கொள்ள http://adlonlinecourses.com/dairy-cattle-bag205 என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
Learn more »

சிறு மற்றும் குறுந்தொழில்கள் மானியம்... யாருக்கு? எவ்வளவு?

            படித்துவிட்டு ஏதாவது ஒரு வேலைக்குச் சென்றுவிடவேண்டும் என்று இன்றைய இளைஞர்கள் துடிக்கிறார்கள். ஆனால், இளைஞர்கள் சொந்தமாகத் தொழில் தொடங்குவதை ஊக்குவிக்க மத்திய, மாநில அரசாங்கங்கள் பலவகையிலும் மானியம் தருகிறது. ஆனால், அதுகுறித்த தகவல்கள் இன்றைய இளைஞர்களுக்கு தெரியவே இல்லை. சொந்தமாகத் தொழில் தொடங்க நினைக்கிறவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் என்னென்ன மானியங்களை அளிக்கிறது, இந்த மானியங்கள் யாருக்கு கிடைக்கும், இதைப் பெற என்ன தகுதி வேண்டும் என்பதை விளக்கமாக எடுத்துச் சொல்லவே இந்தக் கட்டுரை. முதலில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (ஜிமிமிசி) தரும் மானியங்களைப் பற்றி பார்ப்போம்.  
முதலீட்டுக்கான மானியம்!
தகுதியுள்ள தொழில்கள்: லாபகரமாக செயல்படுத்தத்தக்க அனைத்து உற்பத்தி மற்றும் சேவை தொழில்கள் மற்றும் அனைத்து வகையான குறுந்தொழில்களுக்கும் கிடைக்கும்.
வழங்கப்படும் மானியம்: கட்டடம் மற்றும் இயந்திரங்கள் வாங்க திட்ட மதிப்பில் 15%-30%.
கூடுதல் முதலீட்டு மானியம்!
தகுதியான நபர்கள்: தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்கள், பெண்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மாற்று பாலினத்தவர்கள்.
மானியம்: முதலீட்டு மானியம் கூடுதலாக 2% அல்லது ரூ.2 லட்சம்.  
தொழில் ஊக்க மானியம்!
தகுதியான நபர்கள்: 25 தொழிலாளர்களுடன் இயங்கும் தொழில் நிறுவனங்கள்.
மானியம்: முதல் மூன்று வருடங்களிலிருந்து ஐந்து வருடங்களுக்கு உற்பத்தியிலிருந்து 5% அல்லது அதிகபட்சம் ரூ.5 லட்சம் வரை.
தகுதியுள்ள தொழில்கள்: பின்தங்கிய பகுதிகள் மற்றும் விவசாயத் துறை சார்ந்த தொழில்கள்.
மானியம்: முதலீட்டு மானியம், கூடுதல் முதலீட்டு மானியம், தொழில் ஊக்க மானியம் என மூன்று வகைகளிலும் பெறலாம்.
புதிய வகை தொழில்களுக்கான மானியம்!
தகுதியான தொழில்கள்: பின்தங்கிய பகுதிகளில் மாநில அரசு ஊக்குவிக்கும் தொழில்கள்.
வழங்கப்படும் மானியம்: திட்டமதிப்பிலிருந்து கட்டடம் மற்றும் இயந்திரங்கள் வாங்க 15%  அல்லது அதிகபட்சமாக ரூ.30 லட்சம்.
வட்டி மானியம்!
தகுதியான நபர்கள்: மத்திய, மாநில அரசின் திட்டங்கள் மூலம் கடனுதவி பெற்ற தொழில் முனைவோர்.
வழங்கப்படும் மானியம்: தொழில் தொடங்கிய பிறகு வங்கிக் கடனுக்குச் செலுத்தும் வட்டியிலிருந்து 3% அல்லது அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை. தொழில் தொடங்கிய முதல் ஐந்து வருடங்களுக்குள் அல்லது கடன் தொகை ரூ.100 கோடியாக இருக்க வேண்டும்.
அணுகவேண்டிய அலுவலகம்:
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம்,
692, அண்ணாசாலை,
நந்தனம், சென்னை - 600 035.
அடுத்து, தமிழ்நாடு அரசு தொழில் வணிகத் துறை அளிக்கும் மானியங்களைப் பார்ப்போம்!
புதியத் தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (நீட்ஸ்)!
தகுதி: முதல் தலைமுறை தொழில் முனைவோர்கள்.
திட்ட மதிப்பு: ரூ.5 லட்சத்திலிருந்து 1 கோடிக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பட்டப் படிப்பு/ பட்டயப் படிப்பு/ அங்கீகரிக்கபட்ட பயிற்சி நிறுவனங்கள் மூலம் பெறப்பட்ட தொழில் கல்வி மற்றும் ஐ.டி.ஐ.
தகுதியுள்ள தொழில்கள்: லாபகரமாக செயல்படுத்தத்தக்க அனைத்து உற்பத்தி மற்றும் சேவைத் தொழில்கள்.
மானியம்: திட்ட மதிப்பில் 25 சதவிகிதம் அல்லது அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை.
வேலையற்ற இளைஞர்களுக்கான  வேலைவாய்ப்பு பெருக்கத் திட்டம்!
தகுதி: 8-ம் வகுப்பு தேர்ச்சி
திட்ட மதிப்பு: வியாபாரம் சார்ந்த தொழில்கள் - ரூ.1 லட்சம்; சேவை தொழில்கள்: ரூ.3 லட்சம்
உற்பத்தி தொழில்கள்: ரூ.5 லட்சம்
தகுதியான நபர்கள்:
பொதுப்பிரிவினர்: 18 வயதுக்குள்ளும் 35 வயது மிகாதவராகவும் இருக்க வேண்டும்.
சிறப்புப் பிரிவினர்: பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப் பட்டோர், சிறுபான்மையினர், முன்னாள் ராணுவத்தினர், மாற்று பாலினத்தவர்கள் 45 வயது வரை இருக்கலாம்.
குடும்ப ஆண்டு வருமானம்: ஆண்டிற்கு ரூ.1,50,000 மிகாமல் இருக்க வேண்டும்.
வழங்கப்படும் மானியம்: திட்ட மதிப்பீட்டில் 15%.  
அணுக வேண்டிய அலுவலகம்:
மண்டல இணை இயக்குநர்,
தொழில் வணிகத் துறை,
திரு.வி.க, தொழிற்பேட்டை, கிண்டி,
சென்னை - 600 032
அடுத்து, தாட்கோ நிறுவனம் அளிக்கும் மானியங்களைப் பார்ப்போம்!
மரபுசாரா தொழில்களுக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள்!
தகுதியான நபர்கள்: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்.
கல்வித் தகுதி: பெட்ரோல், டீசல், எரிவாயு விற்பனை நிலையங்கள் அமைக்க 12-ம் வகுப்பு தேர்ச்சி.
திட்ட மதிப்பு : ரூ.1.50 - ரூ.7.5 லட்சம் வரை
வழங்கப்படும் மானியம்: திட்ட மதிப்பில் 30% அல்லது அதிகபட்சமாக ரூ.2.25 லட்சம்.
குடும்ப ஆண்டு வருமானம்: ஆண்டு வருமானம் ரூ.1 லட்சம் மிகாமல் இருக்க வேண்டும்.
பெட்ரோல், டீசல், எரிவாயு விற்பனை நிலையங்கள் அமைக்க மற்றும் மருத்துவமனை அமைக்கும் திட்டங்களுக்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
அணுக வேண்டிய அலுவலகம்:
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை
அனைத்து மாவட்ட ஆட்சியரகம்.
மத்திய அரசு வழக்கும் மானியத் திட்டங்கள்!
பாரதப் பிரதமர் வேலைவாய்ப்பு ஊக்குவிப்புத் திட்டம்: கிராமப்புறங்களில் சுயவேலைவாய்ப்பை ஊக்குவிக்கும்விதமாக இத்திட்டம் செயல்ப டுத்தப்படுகிறது.
தகுதியான நபர்கள்:
பொதுப்பிரிவினர்: 18 வயது முடிந்த நகர்ப்புறம் சார்ந்த தொழில்முனைவோர்கள்.
சிறப்புப் பிரிவினர்: பெண்கள், சிறுபான்மை யினர், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், எல்லைப்பகுதி மற்றும் மலைப்பகுதிகளில் வசிக்கும் தொழில் முனைவோர்கள்.
வழங்கப்படும் மானியம்: நகர்ப்புற பொதுப்பிரிவினருக்கு திட்ட மதிப்பில் 15 சதவிகிதம், கிராமப்புற பொதுப்பிரிவினருக்கு திட்ட மதிப்பில் 25 சதவிகிதம். நகர்ப்புற சிறப்புப் பிரிவினருக்கு திட்டமதிப்பில் 25 சதவிகிதம், கிராமப்புற சிறப்புப் பிரிவினருக்கு 35 சதவிகிதம்.
திட்ட மதிப்பு: உற்பத்தித் துறை சார்ந்த தொழில்கள் அதிகபட்சம் ரூ.25 லட்சம், சேவை மற்றும் வியாபாரத் துறைகளுக்கு அதிகபட்சமாக ரூ.10 லட்சம்.
கல்வித் தகுதி : 8-ம் வகுப்பு தேர்ச்சி.
சி.எல்.சி.எஸ்.எஸ். திட்டம்! (Credit Linked Capital Subsidy Scheme)
சிறு, குறுந்தொழில் நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு இந்த மானியம் கிடைக்கிறது.
தகுதியான நபர்கள்: லாபகரமாக இயங்கும் சிறு குறுந்தொழில் நிறுவனங்கள்.
மானியம்: கடன் தொகையிலிருந்து 15% அல்லது ரூ.15 லட்சம் வரை. (இயந்திரம் வாங்க ரூ.1 கோடி வரை கடன் கிடைக்கும்.)  
தொடர்பு அலுவலகம்:
இயக்குநர், எம்.எஸ்.எம்.இ. மேம்பாட்டு நிறுவனம், 65, ஜி.எஸ்.டி, சாலை, கிண்டி, சென்னை- 600 032
ஆர்.டி.யூ.எஃப். (Restructured Technology Upgradation Fund)
ஜவுளி உற்பத்தித் துறைகளில் தொழில் நுட்பத்தை மேம்படுத்தவே இந்த மானியம். இது ஜவுளித் துறை அமைச்சகத்தின் வழி  வழங்கப்படுகிறது.
தகுதியான நபர்கள்: ஜவுளி உற்பத்தி துறையில் ஈடுபட்டுள்ள தொழில்முனைவோர்கள்  
வழங்கப்படும் மானியம்: தொழில் கடனுக்கான வட்டியிலிருந்து 4-5% வரை திரும்பப் பெறமுடியும்!
முதல் ஏழு வருடங்களுக்கு இச்சலுகை பெற முடியும். கடனைத் திரும்பச் செலுத்துவதில் இரண்டு வருடங்கள் சலுகை.
தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியின் கீழ் மார்ஜின் மணி மானியம்!
திட்டம் - 1
தகுதியான நபர்கள்: ஜவுளி உற்பத்தித் துறையில் ஈடுபட்டுள்ள தொழில்முனைவோர்கள்.  
வழங்கப்படும் மானியம்: இதில் ரூ.45 லட்சத்திற்கு உட்பட்ட இயந்திரங்கள் வாங்கும்போது 15% மானியம்.
திட்டம் - 2
வழங்கப்படும் மானியம்: ரூ.60 லட்சம் அல்லது ஒரு கோடி வரை இயந்திரங்கள் வாங்கும்போது 20% மானியம்.
ஆயத்த ஆடை தொழில்!
வழங்கப்படும் மானியம்: 5% வட்டி திரும்பப் பெற்றுக்கொள்ளுதல் மற்றும் முதலீட்டிலிருந்து 10% மானியம். (இயந்திரங்கள் வாங்கும்போது)
எம்.ஓ.எஃப்.பி.ஐ. (Ministry of Food Processing Industries)
மத்திய உணவுத் துறை அமைச்சகம் வழங்கும் திட்டங்கள்!
தகுதியான தொழில்கள்: உணவுப் பொருட்கள் பதப்படுத்தும் தொழில்களுக்கு வழங்கப்படும்.
மானியம்: இயந்திரங்கள், கட்டடம் மற்றும் டெக்னிக்கல் சிவில் வேலைகளுக்கு ஆகும் செலவில் 25% அல்லது ரூ.50 லட்சம் வரை.
எந்த வகை தொழில்கள்: ரைஸ் மில், ஆயில் மில், மற்றும் மாவு மில்கள் அமைக்க, பால், பழம், மற்றும் காய்கறிகள் பதப்படுத்தும் தொழிலகங்கள் அமைக்க.
அணுகவேண்டிய அலுவலகம்:
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம்
692, அண்ணாசாலை, நந்தனம், சென்னை 600 035.

இனி வேலை வாய்ப்புகளுக்கு காத்திருப்பதை விட சொந்தத் தொழில் செய்து முன்னேற அரசாங்கம் அளிக்கும் மானிய உதவிகளைப் பயன்படுத்திக்கொள்வோம்.
Learn more »