.

கம்ப்யூட்டர் உதவியுடன் வடிவமைப்பு பயிற்சி நெல்லையில் 15-ந் தேதி தொடங்குகிறது

நெல்லையில் இந்திய அரசின் கம்ப்யூட்டர் உதவியுடன் வடிவமைப்பு என்ற வேலைவாய்ப்பு பயிற்சி வருகிற 15-ந்தேதி தொடங்குகிறது.
தொழில்நுட்ப பயிற்சி
இந்திய அரசு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சி அமைச்சகம் நெல்லை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சி நிலையம் (கிளை), தென் மாவட்டங்களில் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்காக தொழில் பயிற்சிகள் நடத்தி வருகிறது. தற்போது நவீன மாற்றங்களுக்கு ஏற்ப புதிய தொழில் நுட்ப பயிற்சியான கணினி உதவியுடன் வடிவமைப்பு பயிற்சியை வருகிற 15-ந் தேதி தொடங்க உள்ளது. இந்த பயிற்சி 30 நாட்கள் நடைபெறுகிறது. கணினி உதவியுடன் வடிவமைப்பு அறிமுகம், அடிப்படை தொழில் நுட்பம், எடிட்டிங், ப்ளாட்டிங் தொழில் நுட்பம், 2டி டயமென்சன் என்பன போன்ற தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
15-ந் தேதி
தொழிற்கல்வியில் இயந்திரவியல், சிவில், மின்னியல் ஆகிய பிரிவுகளில் படிப்பவர்களுக்கும், தொழிற்கல்வி முடித்து வேலைக்காக காத்திருப்பவர்களும், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வேலைவாய்ப்புகளை பெறுவதற்கு இப்பயிற்சி பயன்படும். பயிற்சியின் முடிவில் இந்திய அரசு சான்றிதழ் வழங்கப்படுகிறது. 18 வயது நிரம்பியவர்கள் இப்பயிற்சியில் கலந்து கொள்ளலாம். உச்ச வயது வரம்பு ஏதும் கிடையாது.
பயிற்சி பெற விரும்புபவர்கள் வருகிற 15-ந் தேதி காலை 10 மணிக்கு ‘ஸ்பைஸ் சி.என்.சி இன்ஸ்டியூட், 262 இ, திருச்செந்தூர் சாலை (முருகன்குறிச்சி சிக்னல் அருகில்) பாளையங்கோட்டை‘ என்ற முகவரிக்கு நேரில் வர வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு...
வரும்போது, 2 பாஸ்போர்ட் அளவு போட்டோ, ரேசன் கார்டு நகல், மாற்றுச்சான்றிதழ் நகல், பயிற்சி கட்டணத்திற்கான டிமாண்ட் டிராப்ட் ஆகியவற்றை கண்டிப்பாக கொண்டு வரவேண்டும். எஸ்.சி\எஸ்.டி பிரிவினருக்கு 50 சதவீதம் கட்டணச்சலுகை வழங்கப்படுகிறது.
இதுபற்றி மேலும் விபரங்கள் அறிய 9965028051, 9443726872, 0462-2342137 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை சிறு, குறு தொழில் மைய நெல்லை உதவி இயக்குனர் லெ.குட்டிராஜா தெரிவித்துள்ளார்.

0 comments :