.

இயற்கையின் அழகில் பசுமை பாவூர் 2015 சில படங்கள்...



வளர்பருவ கதிர்கள்
ஓரமாய் 
ஒற்றைப் பம்பும்
ஒற்றைக் கிணறின்
ஊற்று நீரும்
சுற்றும்
தென்னைமர
வாழைத் தோப்பும்
செழித்த பாவூர்
Keelapavoor

விவசாயிகள் நடந்துபோன வரப்பு
ஊர்திகளின் சாலையாக வளர்ச்சி

Keelapavoor



Keelapavoor

நட்டு வளர்த்த
நாற்றெல்லாம்
நன்செய் பயிராய்


கதிரவனை 
காக்கைகளை
நீரலையை
சட்டத்தில் கொணர்ந்தவனை
புகழ்வேனா ?

மின்கம்பம் அதை
நீர் நடுவே
நட்டவனை இகழ்வேனா ?

மலட்டுநீரை
மண்டவிட்ட மனிதர்களை
தூற்றுவேனா ?

பெரியகுளத்துக்குத்தான்
விடியலொன்றை
தரவேண்டி
கதிரவனை வணங்குவேனா ?

விடைகொடு யென்
பாவூர் தாயே...








இலை முதல்
தோல் வரை
உணவாகி மருந்துமாகும்
பப்பாளி மரமே..



கதிரவனுக்கும்
கதிர்களுக்குமான
காதலில்
தேகம் படர்ந்த பனி
உருகி ஒழுகுகிறது


பருவம் கடந்து
பக்குவமாய் வளர்ந்து
அறுவடைக்குத் தயாரானேன்
பாங்காய் எனை வளர்த்தவனின்
பசிபோக்க காத்திருக்கிறேன்


உழைப்பவனின் உள்ளங்கையாக
விரிந்து கிடக்கும்
நெற்கதிர்கள்

Keelapavoor


வாழை போல
தன்னைத் தந்து
தியாகியாகுபவன்
விவசாயி ஒருவன் தான்


Keelapavoor

Keelapavoor

Keelapavoor



Keelapavoor

Keelapavoor

படங்கள்: சசி .ஞானசேகரன்
எழுத்து: ஜெ. பாண்டியராஜ்

1 comment :

  1. I think this is among the most important info for me. And i am glad reading your article. But should remark on some general things, The website style is wonderful, the articles is really excellent : D. Good job, cheers capitalone.com

    ReplyDelete