.

எம்பி மேம்பாட்டு நிதியிலிருந்து கீழப்பாவூரில் வளர்ச்சி திட்டம்

           கீழப்பாவூர் பேரூராட்சி மற்றும் நாகல்குளம் ஊராட்சியில் புதிதாக சமுதாய நலக்கூடம், நியாய விலைக்கடை, புதிய நூலகத்திற்கு பூமி பூஜை போடப்பட்டது .



நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.பி. பிரபாகரன் எம்பி மேம்பாட்டு நிதியிலிருந்து கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் நாகல்குளத்தில் ரூ.20 லட்சம் செலவில் சமுதாய நலக்கூடமும், கீழப்பாவூர் பேரூராட்சியில் ரூ.8 லட்ச  ம்  மதிப்பீட்டில் நியாய விலைக்கடை , சிண்டெக்ஸ் டேங்க் அமைப்பதற்கு ரூ.2 லட்சமும், புதிதாக நூலகம் கட்டுவதற்கு ரூ.15 லட்சமும் நிதி ஒதுக்கப்பட் டது . இதற்கான அடிக்கல் நாட்டு  
விழாவிற்கு கலெக்டர் கருணாகரன் தலைமை வகித்தார். நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.பி. பிரபாகரன் பூமி பூஜையை துவக்கி  கல்வெட்டை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் திட்ட இயக்குனர் விஜயகுமார், பி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ,மாவட்ட மைய நூலக அலுவலர்  மந்திரம் தாசில்தார் சுகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் செல்லப்பாண்டியன், கூடுதல் ஆணையாளர் சிதம்பரம், கீழப்பாவூர் பேரூராட்சி நிர்வாக அதிகாரி விஜயகுமார், கிராம நிர்வாக அதிகாரிகள் அம்மையப்பன், கார்த்திக்ராஜா, ஒன்றிய கவுன்சிலர் ஞான அருள் பொன்னுத்தாய், , நாகல்குளம் ஊராட்சி மன்றத் தலைவர் கோமதி நாச்சியார், மாவட்ட கவுன்சிலர் சேர்மப்பாண்டி, உட்படபலர் கலந்துகொண்டனர்.

 மேலும் கலெக்டரிடம்  கீழப்பாவூர் பெரிய குளத்தில் ஆக்கிரமித்துள்ள அமலை செடிகளை அகற்ற வேண்டும் என்று கே.ஆர்.பி. பிரபாகரன் எம்பி கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து  கலெக்டர் கருணாகரன், திட்ட இயக்குனர் விஜயகுமார் உட்பட அரசு உயர் அதிகாரிகள் கீழப்பாவூர் பெரிய குளத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

News -  

PIRAMA NAYAGAM

0 comments :