.

இலக்கியமன்றமா இல்லை பட்டிமன்றமா

சில வருடங்களாக ஒரு ஏக்கமுண்டு, அறிவுக்கான ஏக்கம் இலக்கிய மன்றம் என்ற பெயரில் உள்ள ஒரு குழு எவ்வளவு ஆக்கப்பூர்வமாக செயல்படவேண்டும்? ஆனால் நம்மூரில் அப்படி நிகழ்கிறதா? யாரேனும் இதைப்பற்றி கவலை பட்டிருக்கோமா, கவலைப்பட வேண்டாம் குறைந்தபட்சம் இலக்கியமன்றத்தின் செயல்பாடுகள் எந்த வரைமுறையுடன் இருக்க வேண்டுமென அறிவோமா?

படிக்காத தலைமுறை அறியாமலிருக்கிறது என்றால் ஏற்றுக்கொள்ளலாம் நம் படித்த, எண்ணங்களையும் கருத்துக்களையும் உட்கொண்ட மக்கள் என்ன செய்கிறோம்? கேள்வி மேல் கேள்வி. 

எத்தனையாவது இலக்கிய மன்ற விழா என்றால் முப்பதை கடந்திருக்கும் என்றே நினைக்கிறேன். ஆனால் இவர்கள் நம்மக்களுக்கு உங்களுக்கு எனக்கு அறிமுகப்படுத்திய இலக்கியங்கள், எழுத்தாளுமைகள் எத்தனை? குறைந்தபட்சம் ஒரு புத்தகத்தினை பற்றியேனும் பேசியிருப்பார்களா இத்தனையாண்டில் அதைக்கேட்க காது கனத்துக்கிடக்கிறது.

தமிழக இந்திய உலக இலக்கியங்கள் போகட்டும் அவை பிழைத்துக்கொண்டன இவர்களின் கைகளிலிருந்தும்  வாய்களிலிருந்தும் என எண்ணிக்கொள்வோம். உள்ளூர் வரலாற்றை பற்றி பேசியிருப்பார்களா.

பொன்னாடை போற்றுவதும் பாட்டும் பட்டிமன்றமுமாக  நீளும் இந்த இலக்கிய அவலத்திற்கு முடிவுண்டா? (இலக்கிய அவலம் எனச்சொல்வதைவிட வெறும் அவலம் எனக்கூறலாம்.) இல்லை இந்த வருடம் போலவே எந்த வருடமும் தமிழ்த் திரையுலக மகா நடிகர்கள் முன்னால் வாய்பிளந்து அமரக்கடவும் அதிமந்திகளாக இருக்கப்போகிறோமா. பள்ளி மாணவர்கள் பங்குபெரும் விழாக்களும் இப்படியான திரைப்பாடல்களுக்கு பிள்ளைகளை ஆடவைப்பது மிகக்கேவலம்.

தமிழ் இலக்கியமன்றம் என்ற பெயரைவிட வெறும் பட்டிமன்ற விழா என்ற பெயரில் விழா நடத்தலாம். அனைவருக்கும் வாழ்த்துகள்.

2 comments :

  1. மூத்தோர் இளையோரிடம் கலந்தாலோசித்து நிகழ்ச்சி நிரல் வடிவமைத்தால் சாலச்சிறந்தது...

    ReplyDelete
  2. இவர்கள் இன்றும் காவலரே செல்வேந்தரே என்று தனிஒருவரை மட்டுமே புகழ் பாட தான் இந்த விழா, இவர்கள் இந்த விழா வைத்து கீழ்ப்பாவூரில் கண்டெடுத்த இளம் இலக்கியவாதிகள் எத்தனை பேர்?? இவர்கள் ஊக்குவித்த இலக்கியவாதிகள் எத்தனை பேர்??? இவர்கள் வெளியிட்ட இலக்கியநூல்கள் எத்தனை?? 40 வருடமாக இலக்கியத்திற்கு ஆற்றிய செயல் என்ன??

    ReplyDelete