.

பாவூர் பசுமை இயக்கம் - ஓர் தொடர் பயணம்

ஒரு செயலை செய்வதற்கான முடிவுகள் எடுக்கும் முன்னர் இருக்கும் தடைகளெல்லாம் தெரித்தோடிவிடும், முதல்நாள் களம் கண்ட மறுகணமே.

நமது ஊர் குளத்தில் கலக்கும் சாக்கடையையும் கொட்டப்படும் குப்பகளையும் அவ்வளவு எளிதாக அகற்றிவிட இயலாதுதான். பஞ்சாயத்தில் மனு கொடுத்து கேட்ட பொழுது மாற்றுத்திட்டமாக அதிக நிதியை கொள்ளும் பாதாள சாக்கடையை முன்வைத்தார்கள் அதுவும் இப்போதைக்கு வந்து சேராது, அப்படியே வந்தாலும் அதிக பயனிருக்குமா என்றெல்லாம் முடிவாகச் சொல்ல இயலாது.

பல்வேறு ஆக்கிரமிப்புகள் ஊருக்குள் அமைதியாக நிகழ்ந்து கொண்டிருக்கும் கசப்பான சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். நீரோடைகளெல்லாம் தார்சாலைகளாக மாற்றி எந்திர வாகனங்களில் சீறிப்பாய்கிறோம், இதுதான் வளர்ச்சியென்று பொதுவாக நம்ப வைக்கப்பட்டிருக்கிறது. இப்படி இன்னல்கள் பல இயற்கையை சோதிப்பது காலப்போக்கில் நிகழ்ந்தாலும் அதை சமநிலைக்கு இழுத்துவர சில உள்ளங்களை இயற்கையே உருவாக்கிக்கொடுக்கும். அவர்களை அடையாளங்கண்டு அணிசேர்த்து முதல் முயற்சியாக குளத்தின் அமலைகளை அழிக்கத்தொடங்கியிருக்கிறோம், இது தொடரவேண்டும், ஊர் நண்பர்கள் ஏனைய பிரச்சினைகளை விவாதித்து குறிப்பிட்ட தடம் நோக்கி நகர்த்த தொடர்ந்து இணைந்திருக்கவும் கருத்துகளை பகிர்ந்துகொள்ளவும். நாம் நடந்து செல்லும் தூரம் நீண்டுக்கிடக்கின்றது. பயணிப்போம்.

இன்று நடந்த குளத்தை தூர்வாறும் பணி சிறப்பாக நடைப்பெற்றது.. முதலில் சின்ன பணியை சிறப்பாக செய்து முடித்தோம்.. பங்களித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.

நீர்நிலையை பாதுகாக்க உதவியவர்கள்
#ராமசாமி
#கிருஷ்ணசாமி
#பால் கணேசன்
#கண்ணண்
#கமல்ராஜ்
#ஸ்ரீ முருகன்
#ஜெய சந்திரன்
#சுடர்
#விஷ்ணு
#ஞானசேகரன்
#ராஜேஷ்
#பொனுத்துரை
#தினேஷகண்ணணா
#கலைராம்
#சிவகுமார் 11 ம் வகுப்பு மாணவன்
#கிருத்திகா 6ம் வகுப்பு மாணவி

குடிதண்ணிர்- மான் மார்க் 
டீ போன்டா- ஸ்ரீ முருகன்

இது ஒரு அருமையான தொடக்கம்...முதல் பணி வெற்றிபெற உழைத்த அனைத்து நண்பர்களுக்கு 

நன்றி !!! நன்றி !!! நன்றி !!!

என்றும் நீர் நிலை ஆதாரத்தை பாதுகாகக்கும் நேக்கத்துடன்...
பாவூர்_பசுமை_இயக்கம்


















1 comment :