.

பசுமை காக்க வாருங்கள்

பாவூர் பசுமை இயக்கத்தின் அடுத்த நகர்வு இதுவாக இருக்க ஆசைபடுகிறேன் 

 

# இதற்காக நான் அவினாசி-அத்திகடவு திட்டத்தை உதாரணமாக இப்பகுதி மக்களிடம் இருந்து அறிந்தவற்றை கூறுகிறேன். ஆரம்பத்தில் பத்திற்கும் குறைவான ஒருங்கிணைப்பாளர்கள் கொண்டு உருவாக்கப்பட்ட இவ்வியக்கம் தற்பொழுது மாபெரும் மக்கள் போராட்டமாக உள்ளது. ஒருங்கிணைப்பாளர்கள் போராட்ட வழிமுறைகளை வகுக்க மக்கள் முன்னெடுத்து செல்கிறார்கள். இவர்களே நீர்வழி திட்டத்தை வகுத்து அரசிடம் சமர்பித்துள்ளனர் தமிழக அரசு அனுமதி வழங்கியது ஆனால் மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. மேலும் இந்த இயக்கத்தினர் இப்பகுதியில் உள்ள நீர் நிலைகளை பராமரித்து வருகின்றனர்.இந்த இயக்கத்தின் பலமே இளைஞர்கள் தான் இவர்கள் தங்களின் செயல்பாடுகளை இப்பகுதி மக்களிடம் கொண்டு சென்றுள்ளனர்.   இந்த இயக்கத்திற்கு இப்பகுதியில் உள்ள தொழில்துறையினர் அனைவரும் ஆதரவாக உள்ளனர் கட்சி பேதமின்றி.நம்  பசுமை இயக்கமும் அடுத்த அடி எடுத்து வைக்க வேண்டும் . நாம் நம் இயக்கத்தின் செயல்பாடுகளை நம்ஊரில் உள்ள இளைஞர்களிடமும் விவசாய பெருமக்களிடமும் கொண்டு செல்ல வேண்டும் . ஐந்நூறு பேரிடம் பேசினால் அதில் நூறு பேர் நம்முடன் தோள் சேர்ந்தாலே போதும் நம் பணியை சிறப்பாக செயல்படுத்தலாம். இதற்க்காக நம் இயக்கத்திற்கு ஐந்து ஒருங்கிணைப்பாளர்களை தேர்ந்தெடுத்து அவர்களின் அறிவுரைபடி செயல்பட வேண்டும். ஒவ்வொரு நாளும் சிறிது நேரம் ஒதுக்கி புது முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் நாமே நீர் மேலாண்மை மற்றும் விவசாயம் சார்ந்த தகவல்களை அறிந்து விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கவேண்டும். நம்பகுதியில் குறு விவசாயிகள் தான் அதிகம் அவர்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கு அரசிடம் இருந்து கிடைக்கும் பயன்பாடுகளை பெற வழிவகை செய்யலாம். வாரம் ஒருநாள் பெரிய குளத்தின் தூய்மை பணியில் ஈடுபடுவது போல் வாரத்தில் ஒருநாள் மாலை நேரத்தில் ஒருமணி நேரம் செலவிட்டு நம் ஊரின் பசுமையை பாதுகாக்க  மக்களிடமும் பெரியோர்களிடமும் அழைப்பு விடுப்போம். முக்கியமாக இளைஞர்களிடம் நம் இயத்தை கொண்டு செல்வோம் கண்டிப்பாக நம்முடன் கைகோர்பார்கள் ஏனென்றால் அவர்களை உருவாக்கியது ஒரு விவசாயியாக தான் இருப்பார் தற்போது உள்ள நிலையில் அவர்களின் கஷ்டம் அனைவரும் அறிவர். இன்றைய நிலை இனி நம் பாவூருக்கு வரக்கூடாது. இதுவே சரியாண தருணம் அனைவரின் எண்ணமும் நம் ஊரின் பசுமையை காப்பதே ஆகையால் நம் இயக்கத்தை அடுத்த நிலைக்கு எடுத்து செல்வோம் அனைவரையும்  ஒன்றிணைப்போம்  பாவூரின் பசுமை மற்றும் இயற்கை வளங்களை பாதுகாக்க.

 

எழுத்தாக்கம் : மு.குருநாதன்

0 comments :