.

பாவூர் பசுமை பணி 12

   12 வது வாரம்  26-2-2017 பாவூர் பசுமை இயக்கம் சார்பாக குளத்தில் உள்ள கருவேல மரம் மற்றும் வேலிசெடிகளை JCB உதவியுடன் அகற்றப்பட்டது

இயங்கும் ஒரு குழுவே தன்னை இயக்கமாக முன்னிருத்திக்கொள்ள முடியும், அவ்வகையில் நாங்கள் இயங்குகிறோம் இயக்கத்தின் நல்லுள்ளங்களால். கரை ததும்ப நீரைக் கண்டவர்கள் கண்ணில் காணக்கிடைப்பது காய்ந்த புல்லும் கழிவுநீர் குட்டையும் குப்பை மேடுமாக மாறிப்போன பெரியகுளம் என்றானபோது, வெதும்பிய உள்ளங்கள் இயற்கை அளித்த இடைவெளியை மராமத்து பணியை மேற்கொள்ளும் நாட்களாக மாற்றிக்கொண்டதும் களப்பணியாளர்கள் தங்களின் விடுமுறை தினத்தை மக்கள் நலனுக்காக ஒதுக்குவதும் எத்தனை சிறப்பானது, வணக்கத்துக்குரியது.

தொடர்ச்சியான செயல்பாடுகளுக்கு பிறகான இந்நாளில் பணியினை வேகப்படுத்த குழுவினரின் நிதி  பங்களிப்பில் அகழ்எந்திரமொன்று வேண்டா விருந்தாளிகளுக்கு சோறுபோட்ட கதையாய் வளர்ந்து நிற்கும் அமலைகளையும் கருவேலங்களையும் வேர் பிடுங்கி களமாடுகிறது. நமது செயல்பாட்டு வினை அன்புள்ளங்கள் பல இயக்கத்தில் இணைய வழி ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
 
 
 
































 

JCB உடன் களப்பணியில் கலந்துகொண்டவர்கள்: 

  • பொன்.கணேசன் 
  • அருணாசலம்    
  •  துரைராஜ்     
  •  கமல்சீனிராஜா    
  •  ஜெயச்சந்திரன்     
  •  சுடர்ராஜ்
  •  சந்தண விஷ்ணு 
  •  சிங்ககுட்டி            
  •   ராஜசங்கர்        
  •  ராம்குமார்   
  •  கலைமுத்துராமன்  
  •   சக்திவேல்         
  •  கோட்டைசாமி      
  •  சிவக்குமார்           
  • சீனீபாண்டி  
 
நிதி : இயக்க உறுப்பினர்கள்
                                                             
குடிநீர்: அருணாசலம்     
 மதிய உணவு : V.K.கணபதி

இளைஞர்களாகிய நாம் விழித்துக்கொள்ளாத வரை சமூகத்தில் மாற்றம் ஏதும் நிகழப்போவது இல்லை

பாவூர் பசுமை இயக்கம் 
கீழப்பாவூர்  - 627806

0 comments :