.

கீழப்பாவூர் வரலாற்று பாதையில்


கீழப்பாவூர் என்ற பெயர் உருவாகியது எப்படி என்று சரியாகத் தெரியவில்லை, ஒரு புராணக்கதை கேட்டதாக நினைவு ஆனால் நினைவிலில்லை. சின்ன தேடலுக்குப்பிறகு பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் நமது ஊர் இப்படியே அழைக்கப்பட்டிருக்கிறது என்பது தெரியவருகிறது.

1854-ம் ஆண்டில் ப்ரோவா கம்பெனியை சேர்ந்தவர்களால் திருநெல்வேலி மாவட்டத்தின் வரைபடம் வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் தென்காசி "Thenkaushee" என்றும், சுரண்டை "Shorunda" எனவும் கீழப்பாவூர் "Keelapauvoor" என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. "Cape Comorin" என்றழைக்கப்பட்ட கன்னியாக்குமரியிலிருந்து அன்றைய விருதுபட்டியான இன்றைய விருதுநகர் வரையிலுள்ள குறிப்பிட்ட சில ஊர்பெயர்களோடு இவ்வரைபடம் வரையப்பட்டுள்ளது. தற்போது அருகிலுள்ள ஊர்கள் என்ன பெயரில் அழைக்கப் பட்டிருக்கும் எனத்தெரியவில்லை, அதற்கான குறிப்புகள் எதுவுமில்லை. கிழக்கிந்திய கம்பெனி ஜமீன்தார்களின் ஆட்சியிடங்களை கைப்பற்றத் தொடங்கியே மொத்த பகுதியை வளைத்ததும் ஊத்துமலை ஜமீனுக்கு கீழ் கீழப்பாவூரின் பெருவாரியான நிலப்பரப்பு இருந்ததும் வரைபடத்தில் இடம்பெற தகுதியாக(?) அமைந்திருக்கலாம். ஊத்துமலையும் வரைபடத்திலுள்ளது.

அதேபோல் 1814-ல் வெளியிடப்பட்ட வரைபடம் ஒன்றில் "Paovoor" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது சற்று முந்தையகாலத்தின் படம் என்பதனால் சுற்றியுள்ள ஊர்களான மேலப்பாவூர்  மற்றும் பாவூர்சத்திரத்தையும் இப்பெயர் குறிப்பதாகக் கொள்ளலாம்.
1804-ல் ஜெர்மன் பதிப்பில் வெளியான வரைபடம் ஒன்றில் குற்றாலம் "Courtallum" என்றும் ஆலங்குளம் "Alumcollum" எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் கீழப்பாவூர் பற்றி குறிப்பெதுவுமில்லை.

தேடுவோம்.

0 comments :