பாபநாசம் அணை | காரையார் அணை | மணிமுத்தாறு அணை
பாபநாசம் அணை:
பாபநாசம் அணை 1942-ஆம் ஆண்டு மேற்கு தொடர்ச்சியில் உள்ள பொதிகை மலையில் கட்டப்பட்டது. இந்த அணை தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள பாபநாசம் அருவிக்கு மிக அருகாமையில் உள்ளது.
பாபநாசம் அணை 1942-ஆம் ஆண்டு மேற்கு தொடர்ச்சியில் உள்ள பொதிகை மலையில் கட்டப்பட்டது. இந்த அணை தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள பாபநாசம் அருவிக்கு மிக அருகாமையில் உள்ளது.
சிவபெருமானும் பார்வதி தேவியும் அகஸ்திய முனிவருக்கு காட்சி தந்து அருளிய இடமாக இது கருதப்படுவதால், இது ஒரு புண்ணிய ஸ்தலமாக திகழ்கிறது. இதற்கு மரியாதை செய்யும் விதமாக இங்கே நிறுவப்பட்டதுதான் அகஸ்தியர் கோயில்.
மலைகளாலும் மரங்களாலும் சூழ்ந்துள்ள இந்த அணையை பார்க்க ஒரு அழகிய ஓவியத்தை போலத்தான் இருக்கும். அதனாலேயே பல சுற்றுலாப் பயணிகளை இந்த இடம் ஈர்க்கிறது.
காரையார் அணை:
முண்டந்துறை புலிகள் காப்பக வட்டாரத்தில் அமைந்துள்ள காரையார் அணை அந்த காப்பகத்தின் ஒரு பகுதியே. சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க இங்கு படகு சவாரியும் உண்டு.
அரை மணி நேர படகு சவாரி பின்னடை நீரில் பெரிய நீர்வீழ்ச்சியின் சாரல்களுக்கு மத்தியில் நம்மை அழைத்துச் செல்லும். இந்த நீர் வீழ்ச்சியை வானத்தீர்த்தம் என்றழைப்பர்.
இந்த அருவியின் நீரில் மருத்துவ குணநலன்களைக் கொண்ட கனிமங்கள் பலவும் கலந்திருப்பதால் இதுவும் சுற்றலாப் பயணிகளை அதிகளவு ஈர்க்கும். இந்த நீர்த் தேக்கத்தில் பல முதலைகளும் உள்ளன.
மணிமுத்தாறு அணை:
மணிமுத்தாறு அணை மற்றும் அருவி, பொதிகை மலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு நீர்த்தேக்கம். இயற்கை வளம் கொண்ட இந்த இடம் வண்ணமயமான அழகை கொண்டுள்ளது.
மேலும் இங்கே மலைகளும், தண்ணீரும், ஆகாயமும் ஒன்று சேர்ந்து காணப்படும் அக்காட்சி, அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக இருக்கும். மணிமுத்தாறு அருவி, அணையிலிருந்து சிறிது தூரம் தொலைவில் தான் உள்ளது.
இதுவும் அணையின் அழகிற்கு சிறிதும் சளைத்தது அல்ல. இங்கே நீராடவும் செய்து இயற்கை அன்னையின் அழகிடம் நம் மனதை முழுவதுமாக பறிகொடுக்கலாம்.

0 comments :