கீழப்பாவூர் கூட்டுறவு வங்கி ரூ.18½ கோடி கடன் வழங்கி சாதனை
கீழப்பாவூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் நடப்பு ஆண்டில் உழவர்கடன், விவசாய நகைக்கடன், நகைக்கடன், வைப்பு கடன், மத்திய காலக் கடன், மகளிர் குழுக் கடன், வீட்டுக்கடன் என மொத்தம் ரூ.18 கோடியே 63 லட்சம் கடன் வழங்கி சாதனை படைத்து உள்ளது. இந்த சங்கம் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து லாபத்தில் செயல்பட்டு, அதன் உறுப்பினர்களுக்கு 14 சதவீத டிவிடெண்ட் வழங்கி வருகிறது.
இந்த தகவலை, நெல்லை மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குனர் சு.முருகபூபதி தெரிவித்துள்ளார்.
Dailythanthi
0 comments :