.

All About Keelapavoor

Showing posts with label Temple. Show all posts

கீழப்பாவூர் ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ணசுவாமி கோவிலில் பவித்ரஉத்சவ விழா

கீழப்பாவூர் ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ணசுவாமி கோவிலில் விழாவில் புண்யாகவாசனம் , பகவத் பிரார்த்தனை நாம சங்கீர்த்தனம் சயனசேவை ,மற்றும் பவித்திர ஹோமம் ,பெருமாள் , விஷ்வக்சேனர் ஆகிய சுவாமிகளுக்கு பவித்ரமாலை சமர்ப்பணம் என பவித்ரஉத்சவ விழா வெகு விமர்சையாக நடைபெற்றது


ஆடி ,ஆவணி ,புரட்டாசி (விஷ்ணு பஞ்ச தினம் )திருவோணம் ,துவாதேசி,அம்மாவாசை , உள்ளிட்ட நாட்களில் இந்த உற்சவம் நடைபெறும். 

இந்த உற்சவத்தின் கலந்துகொண்டவர்கள் இறைவனிடம் எந்த கோரிக்கையும் வைக்க வேண்டியதில்லை அந்த நேரத்தில் சந்நிதியில் இறைவனை தரிசித்தாலே நம் கோரிக்கைகள் நிறைவேறும் இறைவனுக்கு சாத்தப்பட்டபவித்திரமாலையால்இறைவனுக்கே மென்மேலும்  பொலிவையும் சக்தியையும் அவருக்கே தர வல்லது இறைவனுக்கு சமர்பிக்கப்பட்ட பவித்திரமாலை உற்சவத்தில் கலந்து கொண்ட பக்த்தர்களுக்கு  பிரசாதமாக வழங்கபட்டது பூஜைகானஏற்பாடுகளை அர்ச்சகர் ரவி பட்டாச்சாரி தலைமையில் பக்த்தர்கள் செய்திருந்தனர்

News: PIRAMA NAYAGAM
Learn more »

கீழப்பாவூரில் உலக நன்மைக்காக 1008 தீபம் ஏற்றிய பக்த்தர்கள்

உலக நன்மைக்காக 1008  தீபம் ஏற்றிய பக்த்தர்கள் 


 கீழப்பாவூரில் உள்ள நரசிம்ம பெருமாள்  கோவிலில் நேற்று (1-1-2015)அதிகாலை 5.45மணிக்கு ராமநாம பஜனை, 10.30மணிக்கு உற்சவருக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம், அர்ச்சனை, தீபாராதனை நடைபெற்றது.


  மாலை 4மணிக்கு பரமபதவாசல் திறப்பும் சுவாமி சப்பரத்தில் எழுந்தருளி ஆலயத்தை  மூன்று முறை வலம் வருதலும், மாலை 5.45மணிக்கு கோவில் வெளிப்பிரகாரத்தில் ஆலயத்தை  சுற்றி உலக நன்மைக்காக  பக்த்ர்களால் 1008 அகல் விளக்கு தீபம் ஏற்றுதல் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

News - PIRAMA NAYAGAM
Learn more »

கீழப்பாவூர் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு

கீழப்பாவூர் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு  



கீழப்பாவூர் ருக்மணிசத்யபாமா  சமேதஸ்ரீ வேணுகோபால  கோவிலில்  வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று அதிகாலை 5மணிக்கு கோ பூஜை தொடர்ந்து ஸயன சேவை, 12மணிக்கு தீபாராதனை மாலை 6மணிக்கு பரமபதவாசல் திறப்பும், பஜனை, பெண்கள் கோலாட்டத்துடன் சுவாமி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து வருகிற 11ஆம் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது



News- PIRAMA NAYAGAM

Learn more »

கீழப்பாவூர் பெரியாண்டவர் கோவில் தல வரலாறு


      கீழப்பாவூரில் நடுநாயகமாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார் பெரியாண்டவர் பெரியசாமி. விஷ்ணுவின் அம்சமாக இங்கு பெரியாண்டவர் காட்சி தருகிறார். ஊரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த பெரியாண்டவர் கோவிலை ஆலிக்கோவில் என்றும் யானைக்காரன் கோவில் எனவும் அழைக்கிறார்கள். ஆதியில் இந்த கோவில் தோன்றியதால் இந்த கோவில் ஆதி கோவிலாகி பின்னர் ஆலி கோவில் என மருவியிருக்கலாம் என கருதப்படுகிறது. யானைக்கும் பிரதான பூஜை இங்கு நடப்பதால் யானைக்காரன் கோவில் என்கின்றனர். ஒருமுறை கைலாயத்தில் சிவபெருமான் படி அளக்க சென்றிருந்தபோது அங்கு வந்த திருமால் சிவன் ஆசனத்தில் அமர்ந்தாராம். அப்போது அங்கு வந்த சிவபெருமான், தனது இருக்கையில் இருந்த திருமாலை பார்த்து, ஆராய்ந்து பாராமல் அபயம் என வருவோருக்கு வரம் கொடுப்பவன் நான். ஆனால் அவற்றை ஆய்ந்து அதனால் ஏற்படும் பிரச்சினைகளை களைந்து பக்தர்களை காப்பவர் நீர். எனவே நீதான் பெரிய ஆண்டவர் என அருளாசி வழங்கினார்.
அன்று முதல் திருமாலுக்கு பெரியான்டவர் என்ற பெயரும் வழங்கலாயிற்று. கீழப்பாவூர் பெரியாண்டவர் கோவில் தோன்றி பல நூறு ஆண்டுகள் ஆகியிருக்கலாம் என தெரிகிறது. இங்கு வீற்றிருக்கும் பெரியாண்டவர் சிறந்த போர் வீரர். நீயாயம், தர்மம் நீதிகாக்க பாடுபட்டவர். கேரள‌மன்னன் ஆட்சியில் யானைப்படையின் தளபதியாக இருந்தவர் பெரியாண்டவர் என்கிறார்கள் இப்பகுதி பெரியவர்கள். விஷ்ணுவின் அவதாரமாகவே இவர் கருதப்படுகிறார்.





ஒரு காலத்தில் கேரளாவில் பெண்களுக்கும், சான்றோர்களுக்கும் எதிரான கொடுமைகள் இழைக்கப்பட்டபோது பல அங்கிருந்து இடம்பெயர்ந்து கடலோரமாக திருச்செந்தூர், உடன்குடி, குரும்பூர் பகுதிக்கு வந்தனர். அப்போது அவர்களுடன் பெரியாண்டவரும் அவரது யானைப்படையுடன் சான்றோர்களுடன் வந்தாராம். குரும்பூர் பகுதியில் இருந்து சிவகாமி என்ற பெண் தனது கணவர் மற்றும் பலருடன் இடம்பெயர்ந்து இன்றைய கீழப்பாவூர் பகுதிக்கு வந்தனர். அப்போது இந்த பகுதி காடாக காட்சி அளித்தது. சிவகாமி அம்மையாருக்கு 5 மகன்கள். அவர்களுக்கு சிவகாமி அம்மாள் பல்வேறு கலைகளையும் கற்று கொடுத்ததோடு, அங்கு கிடந்த இடங்களை திருத்தி நெல் விளைவிக்க செய்தார்.

காட்டுப்பகுதியில் சிவகாமி அம்மாள் தனது குழந்தைகளுடன் வசித்து வந்தபோது அவருடன் பெரியாண்டவரும் தனது பரிவார தேவதைகளுடன் இங்கு வந்ததுள்ளார். சிவகாமியிடம் தான் இங்கு தங்கப்போவதாகவும், தனக்கும் தன்னுடன் வந்தவர்களுக்கும் உணவளிக்குமாறும் கேட்டார். அங்கு நின்ற தெய்வங்களை கண்ட சிவகாமி அம்மாள் "இவர்கள் எல்லாம் அசைவம் சாப்பிடுவர்களை போல இருக்கிறீர்கள். என்னால் உங்களுக்கு அசைவம் தர இயலாதே" என்றார். அதற்கு பெரியாண்டவரும் அவருடன் வந்த தெய்வங்களும் "நீங்கள் அன்பாக தரும் உணவை உண்டு உங்களுடனே இருக்கிறோம்" என்று அங்கு நிலையம் கொண்டனர். அந்த இடம்தான் தற்போது பெரியாண்டவர் கோவில் அமைந்துள்ள பகுதி. இங்கு பெரியாண்டவர் பெரியசாமியாக விஸ்வரூப கோலத்தில் காட்சி அளிக்கிறார்.

விழா காலங்களில் இவருக்கு மாலைகள் மலைபோல் வந்து குவிவது ஆச்சரியமானது. மலர் மாலைகளுடன் பழ மாலை, பண மாலையும் இவருக்கு பக்தர்கள் அணிவிக்கிறார்கள். இங்கு அனைத்து தரப்பினருமே வந்து பெரியசாமியை வணங்கி வருகிறார்கள்.  பெரியசாமியின் வலது பக்கம் ராமர், ஆஞ்சநேயர் இடதுபுறம் சிவனணைந்தபெருமாள், பார்வதி, லட்சுமி தேவி ஆகிய தெய்வங்கள் உள்ளன. பெரியாண்டவரின் இடப்புறமாக அழகிய யானை காட்சியளிக்கிறது. இதை அடுத்ததாக சங்கிலிபூதத்தார், பேச்சியம்மன் சன்னதி உள்ளது. பெரியாண்டவர் போல சங்கிலி பூதத்தாரும் பிரமாண்டமாக காட்சி அளிக்கிறார். எதிரே சாஸ்தா பூரண புஷ்கலையுடன் காட்சி தருகிறார். சைவ, வைணவ வழிபாட்டுக்கு ஒற்றுமைக்கு இலக்கணமாக இங்கு சிவ வழிபாடும், பெருமாள் வழிபாடும் கலந்தே நடைபெறுகிறது. விழா காலங்களில் நாட்கள் கோவில் சார்ந்த யாரும் அசைவம் சாப்பிடுவது இல்லை. கடுமையான விரதம் மேற்கொண்டு பெரியாண்டவரை வணங்குகிறார்கள்.இந்த கோவிலில் அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் ஒரே நேரத்தில் பூஜைகள் நடக்கின்றன. பெரியாண்டவர் முன்பு தேங்காய் உடைத்தே எல்லா சன்னதிகளுக்கும் கொண்டு சென்று படைக்கப்படுகிறது.

===================================

சிவகாமி மைந்தர்கள்

ஆயிரம் ஆண்டுக்கு முன்பு கீழப்பாவூர் பகுதி காடாக இருந்தது. பின்னர் சிவகாமியின் மகன்களின் குடும்பங்கள் பல்கி பெருகி ஊர் வளர்ந்தது. ஊரில் இருந்து வெளியிடங்களுக்கு பலர் இடம்பெயர்ந்து அங்கும் பெரியாண்டவர் புகழை பரப்ப தொடங்கினர். இன்று 86 கிராமங்களில் இந்த கோவிலை சார்ந்தவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே கோவில் விழாவின்போது கீழப்பாவூரில் கூடுவது சிறப்பு. இந்த கோவிலை சார்ந்தவர்கள் கீழப்பாவூரில் ஆதியில் குடியிருந்த மக்கள் என்பதால் இவர்களை நாட்டாமை வகையறா என்றும் அழைக்கிறார்கள். பெரியாண்டவர் கோவில் கொண்டு அருளாட்சி புரிய காரணமாக இருந்த சிவகாமி அம்மையாருக்கும் இந்த கோவிலில் வழிபாடு நடக்கிற‌து. இவரது சன்னதி பெரியாண்டவரின் நேரே பின்புறம் அமைந்து உள்ளது.

=========================================

வளரும் யானை

கீழப்பாவூர் பெரியாண்டவர் சன்னதியில் உள்ள யானை தொடக்கத்தில் கோவில் உருவானபோது சிவகாமி அம்மாளின் வெற்றிலை பெட்டியில் இருந்து மிக சிறிய அளவில் இருந்ததாம். கோவிலில் பெரியாண்டவர் அமர்ந்ததும் அந்த இடத்தில் சிவகாமி அம்மாள் அந்த சிறிய யானையை எடுத்து தரையில் வைத்தார். அதன்பிறகு அந்த எடுக்க முடியவில்லை. யானை நாளுக்குநாள் வளர தொடங்கியது. இன்று வரை யானை வளர்ந்துகொண்டே இருக்கிறது. தற்போது 5 அடி உயரத்தில் இருக்கும் இந்த யானை பக்தர்களுக்கு வேண்டிய வரங்களை ஐராவதமாக அள்ளி தருகிறது. பெரியாண்டவர் சன்னதி முன்பு நின்று வேண்டப்படும் அனைத்து காரியங்களும் நிறைவேறுகின்றன. யானைப்படையை பெர்யாண்டவர் வழிநடத்தி சென்றதால் வரது சன்னதியில் இந்த யானை பிரதானமாக உள்ளது.

======================================

குறுமறை நாடு

கி.பி. 530 ஆண்டுகளுக்கு முன் தென்காசியைத் தலை நகராக  கொண்டு அரசாண்ட பராக்கிரம பாண்டியன், தென்காசியில் காசி விசுவநாதர் உலகம்மன் ஆலயம் எழுப்பிய வரலாறு நமக்குத் தெரியும். ஆனால் அதற்கும் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு கீழப்பாவூரில் மக்கள் வாழ்ந்தனர் என்கிறது வரலாறு. கீழப்பாவூரை  சுற்றிய கீழப்பாவூர், மேலப்பாவூர், பாவூர்சத்திரம் உள்ளிட்ட இவ்வூர்கள் அடங்கிய பகுதி குறுமறை நாடு என அழைக்கப்பட்டது. அந்த காலத்திலேயே பெரியாண்டவர் கோவில் உருவாகியிருக்கலாம் என வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

=============================




பெரியாண்டவருக்கு மரியாதை

பெரியாண்டவர் கோவிலில் ஆண்டு தோறும் தமிழ் மாத முதல் வெள்ளிக்கிழமை நோன்பு போட்டு 2 வது வெள்ளிக்கிழமை திருவிழா நடைபெறுவது வழக்கம். பெரியாண்டவர் விழா முடிந்த பின்னரே கீழப்பாவூரில் சுப நிக்ழச்சிகள் நடக்கிற‌து. முதன்மை தெய்வமான பெரியசாமிக்கு அப்பகுதி மக்கள் முதல் மரியாதை அளிக்கின்றனர் என்பதற்கு இதுவே சான்று.

===============================

பெரியாண்டவர் அற்புதம்...

இந்த ஊரை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் பல ஆண்டுகளுக்கு முன்பே வெளியிடத்துக்கு சென்றுவிட்டனர். அவர்களில் ஒரு குடும்பம் சிங்கப்பூரில் குடியேறினர். ஒருமுறை அந்த குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டது. மரண‌த்தின் விளிம்புக்கே சென்ற அவருக்கு பெரியாண்டவர் காட்சி அளித்தார். யானை அவரது கனவில் சென்று த‌ண்ணீரை பீய்ச்சியது. உடனே அந்த நபர் குணமானார். ஆனால் அவருக்கு பெரியாண்டவர் பற்றி எதுவும் தெரியாது. ஒருமுறை அவரது கனவில் தோன்றிய இறைவன் கீழப்பாவூரில் கோவில் கொண்டிருக்கும் இடத்தை கனவிலேயே காட்டி வர செய்தார். அன்றில் இருந்து கீழப்பாவூருக்கு அவர் வந்து சுவாமியை வணங்கி செல்வதோடு அன்னதர்மம் மற்றும் கோவில் வளர்ச்சிக்கு நிதி வழங்கி வருகின்றனர். இன்றும் விழா ஆரம்பித்ததும் சிங்கப்பூரில் இருந்து பணம் அனுப்பி வ்டுகிறார்கள்.



Learn more »

மாலைமலரில் வந்த கீழப்பாவூர் நரசிம்மர் கோவில் கட்டுரை

சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கான கீழப்பாவூர் நரசிம்மர் கோவில் காட்சி கொடுத்த ஷேத்திரத்திலேயே நிரந்தரமாக நரசிம்மர் குடிகொண்டுள்ள சிறப்பு கீழப்பாவூர் தலத்துக்கு மட்டுமே உரித்தானது. ஆகவே கீழப்பாவூர் பூலோக வைகுண்டம் என்பது மிகையன்று. 

தலபுராண ரீதியாக தனித்துவம் பெற்று நரசிம்மர் தலங்களுள் முதன்மையானதாக விளங்கும் கீழ்ப்பாவூர் நரசிம்மர் கோவில் மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் ஆகிய முப்பெருஞ் சிறப்புகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இந்தியாவில் 16 திருக்கரங்களுடன் காட்சி தரும் நரசிம்மர் ஆலயங்கள் மூன்று உள்ளன. 


ஒன்று ராஜஸ்தானிலும் மற்றொன்று பாண்டிச்சேரி அருகே சிங்கர்குடி என்ற இடத்தில் ஒரு சிறு குன்றின் மீதும் உள்ளது. மூன்றாவதாக தமிழ்நாட்டில் நெல்லை மாவட்டம் கீழப்பாவூர் கிராமத்தில் சமதளப் பகுதியில் அமையப் பெற்றுள்ளது. 

நரசிம்மர் கீழப்பாவூரில் நித்யவாசம் செய்பவராக, நிரந்தரமாக அர்ச்சாவதாரத் திருமேனியில் குடிகொண்டு அருள் பாலித்து வருவது பக்தர்களை பரவசடையச் செய்கின்றது. காசியபர், வருணன், சுகோஷன் முதலானோர் நரசிம்மர் தரிசனம் வேண்டி மகாவிஷ்ணுவை நோக்கி ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தவத்தில் ஈடுபட்டனர். 

மகாவிஷ்ணுவானவர் அசரீரியாக அவர்களிடம் பேசினார். "பொதிகை மலையில், இறவா வரம் பெற்ற ரிஷிகள் நீரோடுவதற்காக தாமிரபணியில் அகத்திய மாமுனிவர் 32 தீர்த்தங்கள் ஏற்படுத்தியிருக்கிறார். அதில் ஒன்றான மணி முத்தா தீர்த்தத்தில் (தற்போதைய பாபநாசம் பாணதீர்த்தம்) நீராடி அங்கிருந்து 40 கல் தொலைவில் வடக்கே செல்லும் சித்ரா நதிக்கரையில் தவம் இருங்கள். 

நரசிம்மர் தரிசனம் கிட்டும்'' என்பதே அசரீரி வாக்கு. பகவான் கூறியபடி மணி முக்தா தீர்த்தத்தில் புனித நீராடினர் ரிஷிகள். ரிஷிகளின் மெய்யான தவம் மாலைனின் இதயக்கதவை தட்டியது. மீண்டும் நரசிம்ம அவதாரம் எடுக்க திருவுளம் கொண்டார். மறுகணமே ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக 16 திருக்கரங்களுடன் மகா உக்ரமூர்த்தியாக நரசிம்மர் ஒளிப்பிழம்பாக காட்சியளித்தார். 

மெய்சிலித்தனர் ரிஷிகள். நரசிம்மர் தரிசனம் தாயார்களின் தரிசனமும் ஒருங்கே கிடைத்ததால் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தனர். கண் குளிர, சிந்தை மகிழ வணங்கினர். பின்னர் காட்சியளித்த இடத்திலேயே நிரந்தரமாகக் நரசிம்மர் குடிகொண்டு விட்டார். மீண்டும் வைகுண்டம் செல்லவில்லை. 

மகாவிஷ்ணு மீண்டும் தன்னை நரசிம்மராக வெளிப்படுத்தி அர்ச்சாவாரத் திருமேனியில் நிரந்தரமாக குடி கொண்டுள்ள அந்த புண்ணிஸ்தலம் தான் கீழப்பாவூர். தூய்மையான இடத்தில் மகாலட்சமி வாசம் செய்வாள் என்பது பழமொழி. தாயார் வசிக்கும் அவ்விடத்தில் பயிர்கள் செழித்து வளரும். மகாலட்சுமியின் கருணையினால் கீழ்ப்பாவூரில் பயிர்கள் நன்கு செழித்து வருகின்றன. 

ஊரும் செல்வச் செழிப்புடன் அமைதியாக திகழ்கின்றது. அநேக நரசிம்மர் ஆலயங்கள் காடு அல்லது மலைப்பகுதியில் அமைந்திருக்கும். ஆனால் கீழப்பாவூரில் சமதளமான பூமியில், வயல்கள் தென்னந்தோப்புகள், குளங்கள், கால்வாய் என நீர்நிலைகள் சூழ்ந்த பசுமை நிறைந்த பகுதியில் அமையப்பெற்றுள்ளது. 

இது அமைதியான, தெய்வீகச் சூழலும் தென்றல் தவழும் இயற்கை எழிலும் ஒருங்கேயுள்ள புண்ணியஸ்தலம் ஆகும். இங்கு எளிமையான ஆலயத்தில் இரு சந்நிதிகள் உள்ளது. கிழக்கு பார்த்த தனி சந்நிதியில் அலர் மேல் மங்கை, பத்மாவதி சமேத பிரசன்ன வெங்கடாஜலபதி நின்ற திருக்கோலத்தில் தரிசனம் தருகிறார். 

இதனையொட்டி பின்புறமாக மேற்கு நோக்கியுள்ள தனி சந்நிதியில் நரசிம்மர் எழுந்தருளியுள்ளார். எவ்வித பயமும் தயக்கமும் சிரமும் இன்றி சிறுவர் முதல் பெரியவர் வரை வருடத்தின் 365 நாட்களும் கீழப்பாவூர் நரசிம்மரை நேரில் வந்து மிக அருகில் நின்று தரிசிக்கலாம். ஒரே ஆலயத்தில் வெங்கடாசலபதி, நரசிம்மரை தரிசிக்க அருமையான தலம் இதுவாகும். 

வேளாண்மைப் பகுதியிலுள்ள கீழப்பாவூர் நரசிம்மரை வழிபட்டால் 1000 மடங்கு பலன் அதிகம் கிட்டும் என்பது ஐதீகம். சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு வரை கீழப்பாவூர் நரசிம்மர் கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் மாலை நேரத்தில் சிங்கம் கர்ஜிக்கும் சத்தம் ஒலித்துள்ளது. 

நரசிம்மர் கோபமாக இருப்பதாக எண்ணிய பக்தர்கள் பால், இளநீர் அபிஷேகம் செய்யத் தொடங்கியதும் சிம்ம கர்ஜனை நின்றுவிட்டது. மேலும் நரசிம்மரை சாந்தப்படுத்தவதற்காகவே அவரது சன்னதி முன்பாக மாபெரும் தெப்பக்குளம் ஏற்படுத்தியுள்ளனர். 

பரிகாரத்தலம்: 

கீழப்பாவூர் நரசிம்மர் கோவில் கல்யாணத்தடை, கடன் தொல்லை, கோர்ட் வழக்கு, கடுமையான நோய் ஆகியவற்றுக்கான மிகச் சிறந்த பரிகாரத்தலமாக விளங்குகிறது. சுவாதி நட்சத்திரக் கார்களுக்குரிய ஸ்தலமாகவும் திகழ்கிறது. 

வழிபட உகந்த நாட்கள்: 

நரசிம்மரை வழிபடுவதற்கு செவ்வாய், புதன், சனி ஆகிய நாட்களும் மாலை வேளையும் உகந்ததாகும். திருவோணம், பிரதோஷம், வளர்பிறை சதுர்தசி தினங்களில் சிறப்பு பூஜை நடக்கிறது. 

நடை திறப்பு: 

காலை 8.00-11.30, மாலை 5.00-800 

அர்ச்சகர்: இரா.ஆனந்தன் 9442330643. 

இருப்பிடம்: 

திருநெல்வேலி-தென்காசி நெடுஞ்சாலையில் திருநெல்வேலி மேற்காக 44 கி.மீ. தொலைவிலும் தென்காசியில் இருந்து கிழக்காக 10 கி.மீ. தொலைவிலும் உள்ளது பாவூர்சத்திரம் என்னும் ஊர். இங்கிருந்து 2 கி.மீ. அருகில் சுரண்டை என்ற ஊருக்கு செல்லும் வழியில் கீழப்பாவூர் அமைந்துள்ளது. 

- கி.ஸ்ரீமுருகன், கீழப்பாவூர்.
Learn more »

நரசிங்கபெருமாள் கோவிலில் சுவாதி நட்சத்திர பூஜை ஏப்ரல் 16ந்தேதி நடந்தது


 கீழப்பாவூர்  நரசிங்கபெருமாள் கோவிலில் சுவாதி நட்சத்திர பூஜை ஏப்ரல்  16ந்தேதி நடந்தது . இதையொட்டி மாலை 3 மணிக்கு 16 வகை மூல மந்திரஹோமம், விஷ்ணு ஹோமம், சுவாமிக்கு சிறப்பு அபிசேக ஆராதனை நடந்தது .

Narasimmar temple
5.30 மணிக்கு பெருமாள் சப்பரத்தில் தீர்த்தவலம் வருதல் நடைபெற்றது . ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் மற்றும் நரசிம்மசுவாமி கைங்கர்ய சபா குழுவினர் செய்தனர்..

சில புகைப்படம் உங்களுக்காக...






    கோவிலின் எழில்மிகு தோற்றம் 


   சப்பரத்தில் வருதல் 


சுவாதி நட்சத்திர பூஜை


Learn more »

கீழப்பாவூர் நரசிம்மர் கோவில் Photos

கீழப்பாவூர் நரசிம்மர் கோவில் Photos

Click the image get Slideshow 

Keelapavoor temple

Keelapavoor temple

Keelapavoor temple

Keelapavoor temple

Keelapavoor temple

Learn more »

நரசிம்மர் கோவில் ஸ்தல வரலாறு

          இந்தியாவில் உள்ள நரசிம்மர் கோவில்களில் அபூர்வமானதும், வேறெங்கும் காண இயலாத பல்வேறு சிறப்புகள் நிறைந்த தலமாக கீழப்பாவூர் நரசிம்மர் கோவில் விளங்குகிறது. இத்தலம் சுமார் 1,100 ஆண்டுகள் புராதனச் சிறப்புமிக்கதாகும். முதன் முதலில் நரசிம்மர் அவதாரம் நிகழ்ந்தது அகோபிலம் திருத்தலத்தில். 

மீண்டும் அவதாரம் எடுத்த தலம் கீழப்பாவூர் ஆகும். கிருதயுகத்தில் பிரகலாதனுக்காக திருமால் நரசிம்ம அவதாரம் எடுத்து இரண்யனை அழித்தார். சில நாழிகைகளே நீடித்திருந்த நரசிம்ம அவதாரத்தை காண காசிய முனிவர், நாரதர், வருணன், சுகோசன் முனிவர் போன்றோர் விருப்பம் கொண்டு மகா விஷ்ணுவை நோக்கித் தவம் இருந்தனர். 

இவர்களுடைய தவத்தை மெச்சிய பகவான் விஷ்ணு, ``பொதிகை மலைச்சாரலில் அகத்தியர் ஏற்படுத்திய மணிமுக்தா தீர்த்தத்தில் நீராடியபின் அங்கிருந்து 40 கல் தொலைவில் வடக்கே செல்லும் சித்ரா நதிக்கரையில் எம்மை வேண்டித் தவம் இயற்றுக'' என்று கூறி மறைந்தார். 


அதன்படியே முனிவர்களும், தேவர்களும் சித்ரா நதிக்கரையில் பல ஆண்டுகள் கடும் தவம் மேற்கொண்டனர். அந்த தவத்தில் மகிழ்ந்த பகவான் மகாவிஷ்ணு தான் முன்பு எடுத்த நரசிம்ம அவதாரத்தை ஸ்ரீதேவி, பூதேவிகளுடன் மகா உக்ர மூர்த்தியாக 16 திருக்கரங்களுடன் காட்சியளித்தார். 

கர்ஜனையுடன் காட்சியளித்த பகவானைக் கண்ட முனிவர்களும், தேவர்களும் மெய்மறந்து நரசிம்மரை தரிசித்தனர். பின்னர், இந்த அவதாரக் கோலத்திலேயே இவ்விடத்தில் நிரந்தரமாகக் குடிகொண்டார். அந்த இடம் சோழர்கள் காலத்தில் சத்திரிய சிகாமணி என்று அழைக்கப்பட்ட தற்போதைய கீழப்பாவூர் ஆகும். 


சுமார் 300 வருடங்களுக்கு முன் இந்த கோவிலில் மாலை வேளைகளில் சிங்கம் கர்ஜிக்கும் சத்தம் கேட்குமாம். இதனால் பக்தர்கள் அங்கு சென்று வழிபட பயந்தனர். பிற்காலத்தில் நரசிம்மருக்கு இளநீர், பால் அபிஷேகம் செய்ய ஆரம்பித்த பிறகு சாந்தசொரூபியாக மாறி விட்டார் என்றும் கூறுகின்றனர். 

அமைதியான சூழலில், வயல்வெளிகள் நிறைந்த பசுமையான பகுதியில் இந்த ``லட்சுமி நரசிம்மர்'' ஆலயம் அமைந்துள்ளது. இங்கு 16 திருக்கரங்களுடன் நரசிம்மர் காட்சி தருவது சிறப்பாகும். இரண்ய கசிபுவை சிங்கப்பெருமாள் வதம் செய்த காட்சியை இத்தலத்தில் அப்படியே காணலாம். 

இரண்யனை தன் மடி மீது கிடத்தி, இரண்டு கரங்களால் அவனைப் பிடித்து, நான்கு கரங்களால் அவன் வயிற்றைக் கிழித்து, இரண்டு கரங்களால் குடலை உருவி மாலையாகப் பிடித்து, மீதமுள்ள எட்டு கரங்களில் ஆயுதங்களுடன் உக்கிரமாகக் காட்சி தருகிறார். 

கருவறையில் உள்ள நரசிம்மர் மிகவும் உக்ரம் வாய்ந்தவராக இருந்ததால் ஊர் தீர்ப்பற்றி எரிந்தது. இவரின் உக்கிரத்தை தணிக்கும் பொருட்டு பிரம்ம தேவன் லட்சுமியை அனுப்பி வைத்தார். இதனால் நரசிம்மரின் சீற்றம் தணிந்தது. இதனைக் குறிக்கும் வகையில் நரசிம்மரின் மார்பில் லட்சுமி பிரதிஷ்டையாகக் காணப்படுகிறார். 

மகா உக்ரமூர்த்தியாக இருக்கும் நரசிம்ம பெருமாளைத் தணிக்கும் பொருட்டு சன்னதி முன்பாக ஒரு தெப்பக்குளம் வெட்டப்பட்டுள்ளது. இது நரசிம்மர் தீர்த்தம் என அழைக்கப்படுகிறது. இறுதியாக சிவபெருமானே சரபப் பறவையாக அவதாரம் எடுத்து நரசிம்மரின் சீற்றத்தை தணித்தார் என்கிறது தல புராணம். 

கல்யாணத்தடை, கடன் தொல்லை, நீண்டநாள் நோய், நீதிமன்ற வழக்கு போன்றவற்றிற்கு பரிகாரம் செய்து வழிபடும் தலமாக இத்தலம் விளங்குகிறது. பால், இளநீர், அபிஷேகம் செய்தும், பானகம், நைவேத்யம், நீராஞ்சனம் செய்தும் வழிபடலாம். ஆலயத்தில் நெய் தீபம் ஏற்றி 16 சுற்றுகள் பிரதட்சிணமாக வந்தால் பிரார்த்தனைகள் உடனே நிறைவேறுகிறது. 


சிறப்புகள்.... 

தலம், மூர்த்தி, தீர்த்தம் மட்டுமின்றி பல்வேறு சிறப்புகள் நிறைந்தது கீழப்பாவூர் நரசிம்மர் ஆலயம். இந்தியாவில் மூன்று இடங்களில் தான் 16 திருக்கரங்களுடன் கூடிய நரசிம்மர் ஆலயம் உள்ளது. ஒன்று ராஜஸ்தான் மாநிலத்திலும், மற்றொன்று பாண்டிச்சேரி அருகே சிங்ககிரி எனும் சிறுகுன்றிலும் உள்ளது. 

மூன்றாவதாகக் கீழப்பாவூரில் மட்டுமே சமதளமான பகுதியில் 16 திருக்கரங்களுடன் அருள்பாலித்து வருகிறார். சுற்றிலும் வயல்கள், குளங்கள் நிறைந்து பசுமையாக உள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக ரிஷிகளுக்கு காட்சி கொடுத்தது மட்டுமின்றி, நிரந்தரமாகத் தங்கி இருப்பதும் இங்கு மட்டுமே...! 

இருப்பிடம்....... 

திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் தாலுகாவில், கீழப்பாவூர் கிராமத்தில் இந்த லட்சுமி நரசிம்மர் ஆலயம் உள்ளது. தென்காசி - திருநெல்வேலி சாலையில், திருநெல்வேலியில் இருந்து மேற்கில் 32 கிலோ மீட்டர் தொலைவிலும், தென்காசியில் இருந்து கிழக்கில் 10 கிலோ மீட்டர் தொலைவிலும் பாவூர்சத்திரம் எனும் ஊர் உள்ளது. இங்கிருந்து வடக்காக சுரண்டை செல்லும் வழியில் 2 கிலோ மீட்டர் தொலைவில் கீழப்பாவூர் உள்ளது.
Learn more »

16 கரங்கள் கொண்ட லட்சுமி நரசிம்மர் ஆலயம் கீழப்பாவூர்

கத்ரு குணங்களைப் போக்கி நிம்மதி தரும் 16 கரநரசிம்மர்!
கீழப்பாவூர் நரசிம்மர் தரிசனம்
பரமசிவன்

                    திருமாலின் அவதாரங்களில் நரசிம்ம அவதாரம் தனிச் சிறப்பு வாய்ந்ததென்பர். ஏனெனில், தன் பக்தன் பிரகலாதனைக் காக்க ஒரு நொடிப்போதில் தோன்றிய அவதாரம்! நரசிம்மருக்கென்று அமைந்த ஆலயங்கள் இந்தியாவில் பலவுண்டு. அவற்றுள் ஒன்றாகப் பழமையும் பெருமையும் கொண்டு விளங்கும் தலம் கீழப்பாவூர்.

இவ்வூரின் மேற்பகுதியில் அமைந்த குடைவரைக் கோவிலில்தான் பதினாறு கரங்களுடன் அருள்புரிகிறார் நரசிம்மர். குடைவரை அமைப்பைக் கொண்டு பார்க்கும் போது இது பல்லவர் காலத்தைச் சேர்ந்த கோவில் என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். மற்ற கட்டிட அமைப்புகள் சோழர் கால பாணியில் அமைந்துள்ளன. எனவே இது சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கோவில் என்பது தெரிகிறது.

மகாவிஷ்ணு நரசிம்ம அவதாரமெடுத்துப் பல்லாயிரம் ஆண்டுகள் கடந்த நிலையில், மீண்டும் அந்தத் திருக் கோலத்தைக் காண விரும்பினர் காசிபர், வருணன், ககோஷன் உள்ளிட்ட முனிவர்களும் தேவர்களும். அதற்காகக் கடுந்தவம் புரிந்தனர். அப்போது, "பொதிகை மலைச்சாரலில் மணிமுத்தாறு தீர்த்தத் திற்கு நாற்பது கல் தொலைவில் உள்ள சிந்தா நதிக்கரையில் தவம் புரியுங்கள்' என்ற அசரீரி வாக்கு கேட்டது.

அதன்படி அவர்கள் சிந்தா நதிக்கரையில் பல ஆண்டுகள் தவம் புரிய, அதன் பலனாக மகாவிஷ்ணு ஸ்ரீதேவி, பூதேவியுடன் பதினாறு கரங்கள் கொண்டு நரசிம்ம மூர்த்தியாக உக்கிர சொரூபத்துடன் காட்சி தந்தார். அந்தத் திருக் கோலமே கீழப்பாவூர் கோவிலில் அமைக்கப் பட்டுள்ளது.

இவ்வாலயப் பராமரிப்பாளரும் அர்ச்சகரு மான அனந்தய்யங்கார் இத்தல இறைவனின் பெருமை பற்றிக் கூறும்போது, 

""ஸ்ரீ மகாவிஷ்ணு ஒருவரே பல அவதாரங்கள் எடுத்து வந்து பல தத்துவார்த் தங்களைப் பூவுலகிற்கு உணர்த்தியிருக்கிறார். கிருத யுகத்தில் நரசிம்மராகவும், திரேதா யுகத்தில் ராமராகவும், துவாபர யுகத்தில் கிருஷ்ண ராகவும் அவதாரம் செய்த மகாவிஷ்ணு இக்கலியுகத்தில் அர்ச்சாவதாரமாக பல்வேறு ஆலயங்களில் கோவில் கொண்டுள்ளார்.

அர்ச்சாவதார மூர்த்தி கள் ஜென்ம சாபல்யம் தருபவை. பாவப்பட்ட மக்கள் கடைத்தேற இவ்வாறு ஒரு வாய்ப்பை வழங்குகிறார் பெருமாள்.

அதாவது, "இக்கலியுகத்தில் அர்ச்சாவதார மாகக் கோவில் கொண்டி ருக்கும் என்னை நீ அர்ச்சனை செய்து வழிபட்டால் உன் பாவங் கள் அனைத்தும் நீங்கும். மானிடனே, நீ இதைப் பயன்படுத்திக் கொள்' என்கிறார் மகாவிஷ்ணு.

இந்த ஆலயத்தில் தீப மேற்றி வழிபட்டால் மாபெரும் யாகம் செய்த பலன் கிட்டும் என்பதால், இங்கே நரசிம்மருக்கு தீபமேற்றி வழிபடும் முறை முதன்மையாக உள்ளது.

பொதுவாக ஆகம விதிகளின்படி திருக்குளமானது ஆலயத்தின் ஈசான பாகத்தில் அமைந்திருக்கும். ஆனால் இங்குள்ள அமைப்பு வேறுவிதமானது. ஆக்ரோஷம் தணியாமல் வந்தமர்ந்த நரசிம்மரின் சினத்தைக் குளிர்வித்த திருக்குளமாதலால், திருக்குளத்தின்மீது தன் பார்வை படியும்படி மேற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார் நரசிம்மர்.

இந்தத் திருக்குளத்தில் மூழ்கி நரசிம்மரை வழி பட்டால் நம்மிடமுள்ள படபடப்பு, ஆத்திரம், கோபம், குரோதம் போன்ற சத்ரு குணங்கள் அகன்று விடும்.


பிரதோஷ காலங்களில் திருக்குளத்தில் மூழ்கி யெழுந்து பெருமாளை வழி பட்டால் கடன் தொல்லை, திருமணத் தடை போன்றவை நீங்குவதோடு, வியாபார அபிவிருத்தி, தொழில் முன்னேற்றம் உள்ளிட்ட நன்மைகளும் உண்டாகும். இது இங்கு வரும் பக்தர்களின் அனுபவம்.

மேலும் இங்கே அலர்மேலு மங்கை சமேத பிரசன்னவேங்கடா சலபதியும் கோவில் கொண்டுள் ளார். "வே' என்றால் பாவம்; "கடம்' என்றால் அழியும் இடம் என்று பொருள்.  எனவே பாவங்கள் அழியும் இடம் வேங்கடம்; பாவங்களை அழிப்பவன் வேங்கடவன். அத்தகைய வேங்கடவன் இங்கும் கோவில் கொண்டுள்ளதால் இது அனைத்து பாவங் களையும் அழிக்கும் தல மாகிறது. வேங்கடவனின் ஒரு கரம் தன் பாதத்தைக் காட்டிய வண்ணம் இருக்கும். அதாவது, "நீ என் பாதம் பணிந் தால் உன்னை அரவணைத்துக் கொள்வேன்' என்று பொருள். அவன் பாதம் பணிந்தால் கிடைக்காத நன்மைதான் ஏது?'' என்றார் பக்திப் பெருக்கோடு.

அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இவ்வாலயத்தின் பெரும்பகுதி கால மாற்றத்தால் சிதைவடைந்து விட்டது. தற்போது நரசிம்ம பக்த சபையினரின் கட்டுமானப் பொருள் நன்கொடையோடு, பழைய அமைப்பை மாற்றிப் புதிதாய் ஆலயம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.


கீழப்பாவூர் நரசிம்மர் கோவில் Photos


   -  nakkheeran.in
Learn more »